Wednesday, May 1, 2024
-- Advertisement--

கன்னி ராசி : ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2023 -2024..!!! பரிகாரங்கள் விவரம் ..!!!

கூர்மையான அறிவும், எதையும் முன்கூட்டியே செய்யும் திறனும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2, 8-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்களான ராகு- கேது வரும் 30-10-2023 முதல் 18-&- 2025 வரை (வாக்கியப்படி 8-10-2023 முதல் 26-4-2025 வரை) கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எந்த ஒரு செயலையும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும் சில நேரங்களில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நீங்கள் கறுகறுப்பாக இருக்கவேண்டும் என்று நினைத்தாலும் உங்களால் சிறப்பாக செயல்பட ஒருசில தேவையற்ற இடையறுகள் ஏற்படும் மதம் சார்த்த பணிகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

பொதுவாக தேவையற்ற நெருக்கடிகளைக் குறைப்பது, தெய்வீக காரியங்களில் நீங்கள் ஈடுபடுவது மிகமிக நல்லது. உங்கள் ராசிக்கு 7-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது மிகமிக சிறப்பு. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளியிடம் பேசுகின்ற போது சற்று நிதானத்தோடு இருந்தால் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்கலாம்.

உங்களுக்கு இருந்து வந்த கடந்தகால உடல் உபாதைகள் சற்று விலகும் என்றாலும் நீங்கள் பொறுமையோடு செயல் பட்டால் ஒரு வளமான பலன்களை அடையலாம். து ல் இந்த தருணத்தில் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமும். ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமுமான சனி ருண, ரோக ஸ்தானமான 6-ஆம்
வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு ணவரவுகள் மிகமிக சிறப்பாக இருக்கும் நெருங்கியவர்களால் சில நெருக்கடி இருந்தாலும் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களை அடையமுடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத் தும்பரிபூரண வெற்றியினை தரும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் புதிய பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

வெளியூர், வெளிமாநிலங்கள் மூலமாக மிகப்பெரிய ஒரு ஆதாயத்தை அடைவீர்கள் உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்துவந்த பூர்வீகச் சொத்துரீதியான பிரச்சினைகள் எல்லாம் கூட தற்போது ஒரு முடிவுக்கு வந்து சாதகமான பலன்களை பெறுவீர்கள் வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும் கடந்தகாலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு விடிவுகாலம் பிறக்கப்போகிறது என்று கூறினால் அது மிகையாகாது அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கக் கூடிய பலம் உண்டாகும். ஆண்டுகோள் என வர்ணிக்கபடக்கூடிய குரு வரும் 1-5-2024 முடிய 8-ல் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் சற்று சிக்கனத்தோடு இருப்பது.

ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு செயல்படுவது மிகமிக நல்லது எது எப்படி இருந்தாலும் சனி சாதகமாக இருப்பதால் அடைய வேண்டிய இலக்கை நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தற்போது சற்று நிதானத்தோடு நீங்கள் செயல்பட்டால் வரும் 1-5-2024 முதல் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்ற காலத்தில் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருப்பது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.

நீங்கள் நினைத்தது நிறைவேறக்கூடிய ஒரு சூழ்நிலை குரு மாற்றத் திற்குப்பிறகு உண்டு பிள்ளைகள் வழியில் அதிர்ஷ்டங்கள், எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பவம் நீண்டநாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு ஒரு அழகிய குழந்தையை பெற்றெடுக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உறுதியாக கிடைக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 5, 6, 7, 8 நிறம்: பச்சை, நீலம் கிழமை: புதன், சனி கல்: மரகத பச்சை திசை: வடக்கு தெய்வம் ஸ்ரீவிஷ்ணு

பரிகாரம்

கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனைச் செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது, கேதுவுக்கு பரிகாரமாக விதாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது. சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள். வண்ணமயமான போர்வை போன்ற வற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது வரும் 1-5-2024 முடிய குரு சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக 8-ல் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற மலர்களால் அவங்கரித்து, கொண்டை கடலை மாலை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை தானம் செய்வது உத்தமம் மஞ்சள் நிற ஆடைகள், கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள்நிற பூக்களை அணிவது நல்லது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles