பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகர் ஒருவரை கைது செய்துள்ளனர் போலீசார்.
2011 ஆம் ஆண்டு வெளியான ஸ்வயம் க்ருஷி என்ற படத்தின் மூலம் கன்னட திரை உலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் மற்றும் இயக்குநருமான வீரேந்திர பாபு.
இவர் சில படங்களை தயாரித்தும் உள்ளார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 36 வயது உடைய பெண்மணி ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் வீரேந்திர பாபு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்திருக்கிறார். ஒரு நாள் வீரேந்திர பாபு அந்த பெண்ணை வீட்டிற்கு வர சொல்லி இருக்கிறார் அந்த பெண்ணும் வீரேந்திரபாபுவை நம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டு காபி குடிக்காமல் போகக்கூடாது காபி குடித்தே ஆக வேண்டும் என்று அடம்பிடித்து அந்த பெண்ணுக்கு காபி ஒன்றை வீரேந்திர பாபு கொடுத்துள்ளார்.
அந்தப் பெண்ணும் அவர் கொடுத்த காப்பியை குடித்தவுடன் மயங்கியுள்ளார். அந்த பெண் மயக்க நிலையில் உள்ளதை நன்றாக அறிந்து கொண்ட வீரேந்திர பாபு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்துள்ளது. மயக்க நிலையில் உள்ள பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படி வீடியோவை தனது செல்போனில் எடுத்துக் கொண்டு அதை வைத்து அந்த பெண்ணை பிளாக்மெயில் செய்து பலமுறை தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார்.
அதற்கு அந்த பெண் மறுத்ததால் அந்த பெண்ணின் செல்போனுக்கு அந்த வீடியோவை அனுப்பி ஆன்லைனில் இந்த வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டியும் உள்ளார். வீடியோ மூலம் அந்த பெண்ணை மிரட்டி 15 லட்சம் வரை பணம் பறித்துள்ளார் வீரேந்திர பாபு அது மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை காரில் வைத்து மிரட்டியை துப்பாக்கி முனையில் தங்க நகைகளை பறித்துக் கொண்டு சாலையில் தள்ளி விட்டு சென்றுள்ளார் நடிகர்.
இந்த விஷயத்தை மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று அந்தப் பெண் புகார் கொடுக்க உடனே விரைந்து அந்த நடிகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் போலீசார் வீரேந்திர பாபுவின் பென் டிரைவ் லேப்டாப் செல்போன் அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர் போலீசார்.