Thursday, May 2, 2024
-- Advertisement--

மக்கள் நீதி மய்யம் கொடி அகற்றப்பட்டு கமல் படங்கள் எடுக்கப்பட்டது அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள்..!!!

மக்கள் நீதி மய்யம் நடிகர் கமல்ஹாசன் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த கட்சி லஞ்சத்தை ஒழிப்போம் தமிழகத்தை தலை நிமிர்த்துவோம் என்று உரக்கச் சொல்லிக்கொண்டே தமிழக சட்டசபை தேர்தலை சந்தித்தது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் நின்று தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பல மணிநேரம் முன்னிலையில் இருந்த அவர் தேர்தல் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்படும் நேரத்தில் ஆயிரத்திற்கும் மேல் வாக்குகள் பின் தங்கி இருந்தார். அந்த தொகுதியில் அவருக்கு போட்டியாக நின்ற வானதி சீனிவாசன் கடைசியாக தேர்தலில் வெற்றி பெற்றார்.

தேர்தலில் தோல்வி அடைந்ததும் முகங்கள் வாடிப்போய் மெதுவாக வருத்தத்தில் தேர்தல் வாக்குகள் எண்ணும் மையத்தை விட்டு வெளியேறிய கமல் தமிழக முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் அவர்களுக்கு ட்விட்டர் வழியாக வாழ்த்தினை தெரிவித்தார்.

ஸ்டாலின் அவர்களின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட கமலஹாசன் முகம் ஏதோ ஒன்றை பறிகொடுத்தது போல இருந்தது. கம்பீரமாகவும் துருதுருவென்று இவரைப் பார்த்த மக்களுக்கு சங்கடமாக இருந்தது.

ஸ்டாலின் பதவியேற்கும் நாளுக்கு முதல் நாள் மக்கள் நீதி மய்யம் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் அதில் தேர்தலில் கலந்து கொண்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். கமல்ஹாசன் அந்தக் கூட்டத்தை கூட்டுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே அந்த கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் கமலஹாசன் மாறப்போவதில்லை இங்கு ஜனநாயகம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மக்கள் நீதி மய்யம் கூட்டம் முடிந்தவுடன் கமலஹாசன் வெளியிட்ட அறிக்கையில் மகேந்திரன் அவர்களை துரோகி என்றும், கோழை என்றும் குறிப்பிட்டு கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். துரோகிகளை களம் எடுத்துவிட்டோம் இனி நமது கட்சிக்கு ஏறுமுகம்தான் என்று கூறியவர் அடுத்த நாள் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் விழாவிற்கு கலந்து கொண்டார். ஸ்டாலினை தேர்தல் நேரத்தில் விமர்சித்து இருந்தாலும் எதிர்க்கட்சி என்று நினைக்காமல் ஸ்டாலின் பதவி ஏற்கும் பொது வந்தது அவருடைய அரசியல் முதிர்ச்சியை காட்டியது.

கமலஹாசனின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த டாக்டர் மகேந்திரன் அவர்கள் திடீரென்று கட்சியை விட்டு விலகிய உடன் மக்கள் அனைவரும் மகேந்திரன் அவர்களை தோல்வியை கண்டதும் வெளியேறி விட்டீர்களா என்று கமெண்ட் செய்து வந்தனர்.

அதுமட்டுமல்லாமல் மகேந்திரனை போல முக்கிய பொறுப்புகளில் உள்ள ஒரு சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியை விட்டு விலக ஆரம்பித்தனர் நொந்துபோன கமலஹாசன் முகமே மாறிவிட்டதாம் அந்த அளவிற்கு நம்பியவர்கள் எல்லாம் விலக அப்செட் ஆகியுள்ளார் கமல்.

கட்சி தொடங்கி மக்களுக்கு தன்னால் முடிந்த நல்லதை செய்ய வேண்டும் என்று உழைத்த கமலுக்கு இப்படி ஒரு பெரிய அதிர்ச்சி கொடுப்பார்கள் என்று யாருமே நினைக்கவில்லை.

இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன் அவர்கள் இல்லத்திலிருந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியையும் கமல் சம்பந்தப்பட்ட படங்களையும் அகற்றப்பட்டு கட்சி அலுவலகமும் காலி செய்யப்பட்டுள்ளது.

நேர்மையான அரசியலை வழங்க வேண்டும் என்று முயற்சி செய்த கமலுக்கு அந்த சோதனையை பாருங்கள் என்று மக்கள் சமூகவலைதளத்தில் விவாதித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles