Thursday, May 2, 2024
-- Advertisement--

இனி என் எஞ்சிய வாழ்க்கை தமிழ் மக்களுக்கு தான் விழா மேடையில் கமல் உருக்கம்..!!! வீடியோ உள்ளே.

கமலஹாசன் உலகநாயகன் என்பதைத் தாண்டி நேர்மையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அரசியலில் தனது கட்சியினரை நிறுத்தியவர்.

கோவை தெற்கில் வேட்பாளராக நின்ற கமலஹாசன் பல மணி நேரங்கள் கோவையில் முன்னணியில் இருந்தார் அதன்பின் கடைசி இரண்டு மணி நேரங்களில் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் முன்னணி இடத்தில் வந்தார். இருவரில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பதை விட மக்கள் பிஜேபியா கமல்லா என்று ஆர்வத்துடன் தேர்தல் முடிவை இரவு வரை காத்திருந்து பார்த்தார்கள்.

பாஜகவினர் வருவதற்கு கமலஹாசன் வரவேண்டும் என்று ஒருபக்கம் கோஷங்கள் எழுப்பினார்கள். மற்றொரு பக்கம் பாஜக கண்டிப்பாக கோவையில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்கள் பாஜக தொண்டர்கள்.

கடைசி நிமிடம் வரை நம்பிக்கையுடன் இருந்த கமல் வாக்கு எண்ணிக்கை முடியும் பொழுது வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார் என்று தெரிந்த உடன் சற்று வாடிய முகத்துடன் தேர்தல் வாக்கு எண்ணும் இடத்தை விட்டு வெளியேறி நடந்தார்.

அதன்பின் மக்கள் நீதி மய்யம் ஏன் தோல்வியை சந்தித்தது, தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் செயல்கள் பற்றியும், இனி மக்கள் நீதி மய்யத்தை எப்படி கொண்டு செல்வது என்பதை ஆலோசனை செய்ய கூட்டம் ஒன்றைக் கூட்டினார் அந்தக் கூட்டம் கூடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவராக இருந்த மகேந்திரன் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியை விட்டு வெளியேறினார்.

கமல் மாறப்போவதில்லை ஜனநாயக அரசியல் அங்கு நடக்கவில்லை என்று அறிக்கையும் வெளியிட்டார் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் துரோகிகளை களம் எடுத்துவிட்டோம் இனி நமது கட்சிக்கு ஏறுமுகம் தான் என்று கூறிய மகேந்திரனை தாக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

திமுகவை எதிர்க்கட்சியாக நினைத்தாலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்கும் பொழுது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் அதில் பங்கேற்றார் அந்த நேரத்திலும் கமல் முகத்தில் ஏதோ இனம் புரியாத கவலை. அதற்கு காரணம் மக்கள் நீதி மய்யத்தின் உள்ள ஒரு சிலர் தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

தற்பொழுது ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமலுக்கு அந்த தனியார் தொலைக்காட்சி பெரிய வரவேற்பை கொடுத்து கமலை உற்சாகப்படுத்தியது.

அதில் உயிரே உறவே தமிழை என்று பேசத் தொடங்கிய கமல் உங்கள் அன்பை நான் மூன்று வருடங்களாக அனுபவித்து வருகிறேன். என்னில் இருந்து வரும் வார்த்தை என் எஞ்சிய வாழ்க்கை இனி தமிழ் மக்களுக்கு தான் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles