Monday, May 13, 2024
-- Advertisement--

பிக்பாஸ்ஸில் கமலஹாசன் அணிந்து வரும் ஸ்டைலான உடைகளை வடிவமைத்தது இந்த பெண் தானாம்…!!!

உலகநாயகன் கமலஹாசன் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன்-2 என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து இவருடைய அடுத்த படம் என்ன யார் இயக்குவார் என்று ஆர்வமுடன் காத்திருந்தார்கள் ரசிகர்கள். அனைவரையும் சந்தோசப்படுத்தும் வகையில் அமைந்தது அடுத்த படத்தின் கூட்டணி.

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் கமலின் அடுத்தப் படத்தை இயக்குகிறார். கமல் சாரின் தீவிர ரசிகர் அவருடைய படத்தைப் பார்த்துதான் சினிமாவில் ஆர்வம் வந்தது என்று கூறியுள்ளார் லோகேஷ். ஒரு பக்கம் அடுத்த படத்தின் பட வேலைகள் ஆரம்பித்துவிட்டது.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஒன்றைத் தொடங்கி அதற்கான பணிகளும் மற்றொரு பக்கம் படுவேகமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது கமலஹாசன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த மூன்று சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய கமல் தற்போது நான்காவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.

பொதுவாக கமலுடைய பேச்சு தான் வித்தியாசமாக இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே ஆனால் இந்த சீசனில் கமல் அணிந்து வரும் உடைகளும் ரொம்ப வித்தியாசமாகவே இருக்கிறது. கமல் அணிந்து வரும் உடைகளை வடிவமைப்பாளர் அமிர்தா ராம் என்பவராம். உடையின் மாடல் பற்றி பல விவாதங்கள் கொண்டு 72 மணி நேரத்திற்கு பிறகு தேர்வு செய்தார்களாம் இந்த உடையின் டிசைன். கமலஹாசன் இந்த உடையில் செம ஸ்டைலாக இருக்கிறார் என்று இணையத்தில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles