சீனாவில் ஆரம்பித்த கொரானோ தொற்று, தற்போது உலகெங்கும் 150 நாடுகளுக்கு மேல் பாதிப்படைந்து வருகிறது, இதில் இந்தியாவும் ஒன்று.
நாளுக்கு நாள் கொரானோ வைரஸின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகின்ற நிலையில், தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் பல தொழிற்சாலைகள், கல்லூரிகள், கோயில்கள், பாடசாலைகள் முதலியன மூடிய நிலையிலேயே உள்ளன. இதில் மதுக்கடையும் ஒன்று.
இதனால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் ஈட்டித்தரும் மது கடையை மீண்டும் திறக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்காததால் நீதிமன்றம் உடனடியாக கடைகளை மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதற்கு பல அரசியல் கட்சியினரும் மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் மற்றும் மக்கள் மனிதநேய மையத்தின் தலைவரான கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் செய்துள்ளார் அதில் முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது பாதிப்பில் எட்டாவது இடத்தில் இருந்து இரண்டாம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது காசுக்கு ஆசைப்பட்டு மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடி கொண்டிருக்கின்றது அரசு தாங்குமா என்று பதிவிட்டுள்ளார்.
இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். கொரானா பாதிப்பில் இந்தியாவிலேயே அதிக தொற்று உள்ள மாநிலங்களில் இரண்டாம் இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.