Friday, May 17, 2024
-- Advertisement--

உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன்- கமல்ஹசன்.

மக்கள் நீதி மய்யம் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் கோவை மாவட்டத்தில் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வாக்கு எண்ணிக்கையில் இறுதி வரை சென்று தோல்வியுற்றார்.மேலும் மக்கள் நீதி மய்ய கட்சியில் பல்வேறு உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகிச் சென்றனர்.

மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமலஹாசன் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: மக்கள் நீதி மையத்தில் புதுமுகங்களை களமிறக்கி அவர்களை மின்ன வைத்ததுதான் சிலருக்கு சர்வாதிகாரமாக தெரிகிறது. தோல்விக்குப் பிறகு அவரவர் கடமைகளை ஏற்பது தான் நல்ல ஜனநாயகம். தோல்விக்குப் பிறகு நிகழ்ந்துவிட்ட தவறுகளை கெட்ட குழி தேடுவது சிலருக்கு ஜனநாயகமாக படுகிறது அது ஜனநாயகம் அல்ல.

யார் வெளியேறினாலும் மக்கள் நீதி மையம் என்ற கிணறு தூர்ந்து போய் விடாது என்பது சற்று நேர தாகத்திற்காக குடிக்க வந்தவர்களுக்கு புரியாது. நாடோடிகள் யாத்திரைகள் ஓரிடத்தில் இருக்க மாட்டார்கள் வணிகர்களாக இருக்கும்பட்சத்தில் வியாபாரம் உள்ளவரை தங்குவார்கள்.

பிறகு வெளியேறி விடுவார்கள் நம் கட்சியை தங்களது ஆதாயத்திற்காக அவர்கள் மாற்றி ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது செயல் வீரர்களின் கரங்கள் வலுப்படுத்தப்படும் உயிர் உள்ள வரை நான் அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மையம் இருக்கும் என்று கமலஹாசன் கூறியுள்ளார்.


Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles