Saturday, May 4, 2024
-- Advertisement--

என்னது விக்ரம் படம் பார்ப்பவர்களுக்கு அக்கவுண்டில் 500 ரூபாய் கமல் போடுகிறாரா..? இது நல்ல இருக்கே…!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது.

சமீபகாலமாக உலகநாயகன் கமலஹாசன் நடித்து படங்கள் பெரிய வரவேற்பை பெறாமல் இருந்து வந்தது. ஒரு நேரத்தில் கமலஹாசன் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு சமீபத்தில் வெளியான திரைப்படங்களுக்கு கிடைக்காமல் போனது கமலுக்கு மட்டுமல்ல கமலுடைய ரசிகர்களுக்கும் பெரிய வருத்தத்தை கொடுத்து வந்தது.

தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கமல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விஜய் அஜித் ரஜினி திரைப்படங்களுக்கு எப்படி மக்கள் பெரிய வரவேற்ப்பை கொடுப்பார்களோ அந்த அளவிற்கு கமலின் விக்ரம் படத்திற்கு வரவேற்பு கொடுத்துள்ளனர். கூட்டம் கூட்டமாக தியேட்டர் வாசலில் படம் வெளியாகி 5 நாட்களுக்கு பிறகும் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிய ரசிகர்களும் இருக்கிறார்கள் அந்த அளவிற்கு பெரிய வெற்றியை பெற்று வெற்றிகரமாக திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது பாணியில் எப்படி இந்த கதையை சுவாரசியமாக சொல்ல முடியுமோ காட்சிக்கு காட்சி மெனக்கெட்டு படத்தை உருவாக்கியுள்ளார் அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு காட்சியிலும் லோகேஷ் மற்றும் உதவி இயக்குனர்களின் உழைப்பு தெரிகிறது. பரபரப்பான காட்சிக்கு இணையான தரமான இசையை அனிருத் வழங்கி இருந்ததால் காட்சிகள் சுவாரஸ்யம் குறையாமல் இருந்தது. படம் முழுவதும் ஒளிப்பதிவாளர் தனது பங்கிற்கு மிரட்டி இருந்தார்.

கமல் ரசிகரான லோகேஷ் தனது குருநாதரை வைத்து எடுத்த விக்ரம் படத்தில் பல சஸ்பென்ஸ் வைத்திருந்தார். குறிப்பாக கைதி படத்திலிருந்து சில கதாபாத்திரங்களை இந்த படத்திற்கு ஒத்துப் போகும் வகையில் காட்சி அமைத்த விதத்தில் லோகேஷ் பெரிய கெட்டிக்காரர் தான்.

அதுபோல பிரபல நடிகர் சூர்யா அவர்கள் இந்தப் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் இறுதியில் வந்து தியேட்டரை அதகளம் செய்தார் அந்த அளவிற்கு சூர்யாவின் கதாபாத்திரம் இருந்தது. சூர்யா விக்ரம் 3 பாகத்தில் ரோலஸ் கதாபாத்திரத்தில் கமலுடன் நடிப்பார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கமலஹாசன் அவர்கள் இந்த படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு Lexus ES 300h என்ற காரை நேற்று பரிசாக வழங்கினார் இந்த காரின் விலை சுமார் 80 லட்சத்தை நெருங்குகிறது. நீண்ட நாட்களாக பெரிய ஹிட் கிடைக்காமல் இருந்த கமலுக்கு விக்ரம் படம் மாபெரும் ஹிட் படமாக அமைந்ததால் சந்தோஷத்தில் இருக்கிறார் கமல்.

லோகேஷுக்கு கார் வாங்கி கொடுத்த கமல் நடிகர் சூர்யா இந்த படத்தில் நடிக்க ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காததால் அவருக்கு மரியாதை செய்ய பல லட்சங்கள் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை வாங்கி அதனை பரிசாக கொடுத்துள்ளார் கமல்.

அடேங்கப்பா ஆண்டவர் உள்ள குஷியில் படம் பார்ப்பவர்கள் அக்கவுண்டில் 500 ரூபாய் போட்டாலும் ஆச்சரியமில்லை அந்த அளவுக்கு மனிதர் சந்தோஷத்தில் இருக்கிறார் என்று மீம்ஸ் போட்டு வருகிறார்கள் மீம்ஸ் க்ரியேட்டர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles