Friday, May 3, 2024
-- Advertisement--

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு கள்ளன் படக்குழுவினர் செய்த மாபெரும் உதவி…!!! நெகிழ்ச்சியான சம்பவம்.

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான பாடலாசிரியர்களில் ஒருவர் நா.முத்துக்குமார். இவர் திரைப்பட பாடலாசியர் மட்டுமில்லாமல் கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகம் கொண்டவர். எழுத்தாளர், கவிதைகள் படிக்காத சாமானிய மக்களுக்கும் புரியும் அளவிற்கு எளிமை கொண்டவை.

இவர் சினிமா உலகில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் திரைத்துறைக்கு வந்தார். அதோடு தன் கவிதைகளால் ரசிகர்களை கவர்ந்தார். இதுவரை சுமார் 1,500 திரைப்பட பாடல்களை எழுதியவர். அதுமட்டும் இல்லாமல் இவர் தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன் போன்ற பல கவிதைகளின் தொகுப்புகளையும் விற்பவன் என்ற நாவலையும் எழுதி உள்ளார்.

கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் கடந்த 2016 தனது 41-வது வயதில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர். கஜினி படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்ற நாமுத்துக்குமார் பிறகு தங்கமீன்கள், சைவம் ஆகிய படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் அவ்வப்போது திரைப்படங்களுக்கு பாடல் எழுத அதன் மூலம் கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு தொடர்ந்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் எழுத்தாளர் சந்திரா இயக்கத்தில் கரு.பழனியப்பன் ஹீரோவாக நடித்துள்ள கள்ளன் என்ற படத்தின் ஆடியோ உரிமையை விற்று அதன் மூலம் கிடைத்த 4 லட்சம் ரூபாயை நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு வழங்கியுள்ளதாக தயாரிப்பாளர் மதியழகன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles