Friday, May 3, 2024
-- Advertisement--

இந்த வருடம் முதல் இடத்தில் இந்த நடிகையா..? நயன்தாராவையே ஓவர் டேக் பண்ணிட்டாரே…!!

இந்த வருடம் 2002 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் உள்ளதில். அதிக அளவில் மக்களால் தேடப்பட்ட நடிகைகளை லிஸ்ட் வெளியிட்டுள்ளது

அதில் முதல் இடத்தில் உள்ளவர் காஜல் அகர்வால். இந்த வருடத்தில் இவர் சொல்லும் அளவிற்கு எந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் காஜலுக்கு மகன் பிறந்தார்.

திருமணம் நடந்த நாளில் இருந்து நடிப்பதை குறைத்து கொண்ட காஜல் தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக தொடங்கிவிட்டார் இருந்தாலும் காஜலை தான் இணையத்தில் அவரது ரசிகர்கள் அதிகம் தேடி உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் சமந்தா. சமந்தா இந்த வருடம் காத்து வாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது சகுந்தலம் , குஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த வருடம் சமந்தாவின் விவாகரத்து பற்றியும் மற்றும் சமீபத்தில் சமந்தாவிற்கு வந்த நோய் பற்றியும் இணையத்தில் அதிகளவில் தேடி உள்ளனர்.

அதனை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா , இந்த வருடம் சீதாராமம் படத்தில் மட்டும் தான் நடித்திருந்தார். தற்போது வாரிசு படத்தில் விஜயுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் இடத்தில் தமன்னா. இந்த ஆண்டு பிசியான நடிகைகள் ஒருவராக தென்னிந்தியாவில் வலம் வந்தவர் நடிகை தமன்னா. இதனை தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் நயன்தாரா உள்ளார்.

நம்பர் ஒன் நடிகை என்று பெயர் தமிழ்நாட்டில் இருந்தும் நயன்தாரா ஐந்தாவது இடத்திலேயே உள்ளார். நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட், கோல்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து அனுஷ்கா, பூஜாஹெக்டே, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles