Tuesday, May 21, 2024
-- Advertisement--

விரைவில் தாயாக இருக்கும் காஜல் அகர்வால்..!!! முதல் முதலாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காஜலின் கணவர்..!!! சந்தோஷத்தில் குடும்பத்தினர்.

காஜல் அகர்வால் தற்போது தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடன் இந்தியன்2 என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் தனது கணவர் நடிக்க வேண்டாம் என்று எப்போது சொல்கிறாரோ அப்போதே என் நடிப்பை நிறுத்தி விடுவேன் என்று கூறியிருந்தார்.

தனது கணவருடன் வெளிநாடுகள் மற்றும் தீவுகள் என்று சுற்றி வந்த காஜல் தனது தேனிலவை கூட கடலுக்கு அடியில் கொண்டாடினார். அந்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

தற்பொழுது காஜல் அகர்வால் அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார் விரைவில் தாயாகப் போகிறார் என்று செய்திகள் இணையத்தில் கசிந்து வந்தது.

இதைப்பற்றி எந்த ஒரு பதிலும் கூறாத காஜல் தரப்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகியதாக செய்திகள் வெளிவந்தது. படக்குழுவினரும் காஜல் இந்தியன் 2 படத்தில் நடிப்பது பற்றி எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை சமீபத்தில் நியூ இயர் தினத்தில் நடிகைகள் அனைவரும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறி வந்தனர். காஜலும் அவரது கணவரும் வலது தெரிவித்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தனர்.

காஜல் அகர்வால் தற்போது விரைவில் தாயாகப் போகிறார் என்பதை காஜலின் கணவர் கௌதம் முதன்முதலாக ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் 2022ஆம் ஆண்டு உங்களை பார்க்கிறோம் என்று ஒரு கர்ப்பிணிப்பண் எமோஜி ஒன்றை போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக காஜல் பச்சை நிற உடை அணிந்து அவரது கணவர் வயற்றில் உள்ள குழந்தையை சந்தோசத்துடன் தொடுவது போன்று அந்த புகைப்படம் இருந்தது.

காஜல் கெளதம் குடும்பத்தினர் ஜூனியர் காஜலின் வருகைக்காக சந்தோஷத்தில் காத்திருக்கிறார்களாம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles