Tuesday, May 21, 2024
-- Advertisement--

முதல் முதலாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்.!!! சந்தோஷத்தில் மிதக்கும் காஜல் கணவர்.

காஜல் அகர்வால் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை தொடர்ந்து தெலுங்கு சினிமா படங்களில் நடித்து கமர்சியல் நடிகையாக அங்கீகரிக்கப்பட்ட காஜல் அகர்வால் தொடர்ந்து நல்ல நல்ல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் பேரரசு இயக்கத்தில் பரத்துக்கு ஜோடியாக பழனி என்ற படத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம் போன்ற படங்களில் நடித்த காஜலுக்கு தமிழில் பெரிய வரவேற்பு இல்லாததால் மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த ஆர்யா 2 , ஜூனியர் NTR ன் பிருந்தாவனம் போன்ற படங்கள் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

சுசீந்திரன் காஜலை நான் மகான் அல்ல படத்தில் தமிழுக்கு மீண்டும் அழைத்து வந்தார் அதன் பிறகு காஜலுக்கு சில தமிழ் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது சூர்யாவுடன் மாற்றான் படத்தில் நடித்த காஜல் தளபதி விஜயுடன் துப்பாக்கி படத்தில் நடித்திருந்தார்.

விஜய் காஜல் கெமிஸ்டரி துப்பாக்கி படத்தில் நன்றாக இருந்ததால் மீண்டும் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்தார். ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி, கவலை வேண்டாம், விவேகம் போன்ற படங்களில் நடித்த காஜல் ஜெயம் ரவியுடன் கோமாளி என்ற படத்தில் நடித்திருந்தார்.

அந்த படம் இவருக்கு வெற்றியை தேடி தந்தது அதன்பின் உலகநாயகன் கமலஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார் கமலுக்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்த காஜல் ஒரு காலகட்டத்தில் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கவுதம் என்பவரை தனது பெற்றோர்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டார். கௌதம் காஜலின் பள்ளி கால நண்பர் மட்டுமல்லாமல் நீண்ட வருடங்களாக நன்றாக தெரியும் என்பதால் காஜலும் கௌதமை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து தேனிலவுக்கு கடலுக்கு அடியில் கொண்டாடிய காஜல் மற்றும் அவரது கணவர் தனது தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டனர்.

திருமணம் முடிந்த சில மாதங்களில் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் இணையத்தில் வெளிவர ஆரம்பித்தது பிரபலங்கள் அனைவரும் காஜலுக்கு சமூக ஊடகங்கள் மூலமாக வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

எந்த ஒரு பதிலும் சொல்லாமல் சைலண்டாக இருந்த காஜல் உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தில் இருந்து திடீரென்று விலகினார் காஜல். ஏற்கனவே இந்தியன் 2 படம் கொரோனா பிரச்சனை மற்றும் தயாரிப்பாளர் இயக்குனர் இடையே பிரச்சனைகளை கடந்து சூட்டிங் செல்ல இருக்கும் நிலையில் காஜல் பின் வாங்கியது படக்குழுவினருக்கு என்ன செய்வது என்று புரியாமல் போனது. முக்கிய காட்சிகள் காஜலை வைத்து தான் ஏற்கனவே எடுத்து உள்ளார்கள் படக்குழுவினர்.

தற்பொழுது எந்த படங்களிலும் கமிட் ஆகாத காஜல் தனது நண்பர்களுடன் ஓய்வு எடுத்து வருகிறார். தற்பொழுது தனது தோழிகளுடன் வெளியில் சுற்றி வரும் காஜல் முதல்முதலாக கர்ப்பமாக இருப்பது தெரியும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் அப்போ அது உண்மைதானா என்று காஜலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

காஜல் கர்ப்பமாக உள்ளதால் கணவர் கெளதம் சந்தோஷத்தில் மிதக்கிறாராம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles