Tuesday, May 21, 2024
-- Advertisement--

தாய் ஆனார் காஜல் அகர்வால்….!!! வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் ரசிகர்கள்…!!! என்ன குழந்தை தெரியுமா?

காஜல் அகர்வால் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஒரு நேரத்தில் காஜல் அகர்வாலின் கால்ஷீட் வாங்குவதற்கு காத்துக்கிடந்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் பலர்.

பெரிய ஹீரோவை வைத்து படமெடக்க முடிவு செய்தால் அதுவும் கமர்சியல் படமாக இருந்தால் முதலில் காஜலின் கால்ஷீட் தேதி தான் தயாரிப்பாளர்கள் கேட்பார்களாம். அந்த அளவிற்கு காஜலுக்கு தெலுங்கு ரசிகர்களிடம் மவுசு அதிகம்.

காஜல் தனது பள்ளி மற்றும் குடும்ப நண்பரான கௌதம் கிச்சலு என்பவரை அக்டோபர் 30 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கொரோனா காலகட்டம் என்பதால் தனது திருமணத்தை சிம்பிளாக வீட்டிலேய நடத்தி முடித்த காஜல். தேனிலவை மாலத்தீவு சென்று கடலுக்கு அடியில் கொண்டாடினார்.

திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் பிஸியாக இருந்த காஜல் அகர்வால் தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கணவருடன் வெளிநாடுகள் சென்று வருவார்.

காஜல் கமிட்டான சில படங்களில் இருந்து திடீரென்று விலக ஆரம்பித்தார் அப்போது ரசிகர்களுக்கு டவுட் ஒன்று சமூக வலைதளங்களில் காஜல் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை கூறி வந்தார்கள் ஆனால் காஜல் தரப்பும் அவருடைய கணவர் கௌதமும் அமைதியாகவே இருந்தார்கள்.

காஜலின் கணவர் கவுதம் புத்தாண்டு தினத்தில் காஜல் கர்ப்பமாக தான் இருக்கிறார் என்று உறுதி செய்து மகிழ்ச்சியான விஷயத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இன்று தனியார் மருத்துவமனை ஒன்றில் காஜல் அகர்வாலுக்கு மகன் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மகன் பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் காஜலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles