Tuesday, May 21, 2024
-- Advertisement--

சூர்யா வீட்டின் முன் துப்பாக்கி ஏந்திய 5 போலீசாரால் சூர்யாவை காப்பாற்றிவிட முடியாது மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் காடுவெட்டி குரு அவர்களின் மகன் கனல் அரசன் ஆவேசம்.

ஜெய் பீம் உண்மையான கதையை வெளி உலகத்திற்கு எடுத்துச் சொல்லிய அருமையான திரைப்படம். ராசா கண்ணு என்பவர் எந்த ஒரு குற்றமும் செய்யாமல் சித்திரவதை செய்யப்பட்டு காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்டார்.

இதனை ஜெய்பீம் படத்தில் காட்சிகளாக வடிவமைத்து பார்ப்பவர்கள் மனதை கனக்க செய்தார் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல். இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைக்கும் என்று ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் படம் வெளியான சில நாட்களிலேயே படத்திற்கு பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் அதனை நீக்குமாறு பாமக மாநில உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சூர்யாவிற்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார் அதற்கு சூர்யா ஜெய்பீம் படத்தை நாங்கள் யாரையும் புண்படுத்துவதற்காக எடுக்கவில்லை பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை பற்றி பேச முயற்சி செய்து இருக்கிறோம் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டது போல எந்த ஒரு குறிப்பிட்ட தனிநபர்கள் சமுதாயத்தையும் பாதிக்கும் நோக்கும் எப்போதும் எனக்கு படக்குழுவினர்களுக்கோ இல்லை.

சிலர் சுட்டிக்காட்டிய பிழையும் உடனடியாக திருத்தி சரி செய்யப்பட்டது தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன் ஒருவரை குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்த கதாபாத்திரத்தின் பெயர் வேறு ஒருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிக்கையாளர் குறிப்பிடுகிறார். விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ தேவையோ எனக்கு இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதில் கடிதம் கொடுத்து இருந்தார்.

சூர்யாவின் பதில் கடிதம் வந்த பின்பும் சில காட்சிகள் சில கதாபாத்திரங்கள் வன்னியர் சமுதாயத்தினை புண்படுத்தும் படி எடுத்துள்ளதாகவும் அதற்கு சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தது. அதிக எதிர்ப்புகள் வருவதால் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய 5 போலீசார்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மறைந்த பாமக நிர்வாகி காடுவெட்டி குரு அவர்களின் மூத்த மகன் கனல் அரசன் அவர்கள் ஜெய்பீம் விவகாரத்திற்கு சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிடிவாதமாக கூறியுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெய்பீம் படத்தில் விவகாரத்தை பொறுத்தவரை வன்னிய சமூக மக்கள் மிக அமைதியோடும் பொறுமையோடும் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். சூர்யாவின் வீட்டின் முன் 10 ஆயிரம் பேர் ஒன்று கூடினால் அவரால் எதுவும் செய்ய முடியாது அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் சூர்யாவை காப்பாற்றிவிட முடியாது. ஜெய்பீம் படத்தில் தேவையில்லாமல் குறிப்பிட்ட காட்சியில் அந்த காலண்டர் வைப்பதற்கான அவசியம் என்ன அந்தக் காட்சிகள் வன்னிய சமூக மக்களை புண்படுத்தி உள்ளது அதனால் சூர்யா மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் அப்படி அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரால் எந்த படத்திலும் நடிக்க முடியாது, எந்த படமும் எடுக்க முடியாது அந்தப்படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் அவர்கள் வீட்டை விட்டுக் கூட வெளியே வர முடியாது சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் காடுவெட்டி குரு அவர்களின் மூத்த மகன் கனல் அரசன்.

கனல் அரசன் அவர்களின் இந்த பேச்சு ஜெய் பீம் விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles