Friday, May 3, 2024
-- Advertisement--

கடக ராசி : ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2023 -2024..!!! பரிகாரங்கள் விவரம் ..!!!

யாருக்கும் அஞ்சாத குணமும் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பு கொண்ட கடக ராசி நேயர்களே, சந்திரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு 4,10-ல் சஞ்சரிக்கும் ராகு- கேது தற்போது ஏற்படும் இடபெயர்ச்சிமூலம் திருக்கணிதப்படி வரும் 30-10-2023 முதல் 18-5-2025 வரை (வாக்கியப்படி 8-10-2023 முதல் 26-4-2025 வரை). உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் கேது, பாக்கிய ஸ்தனமான 9-ஆம் வீட்டில் ராகு சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பு ஆகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம், உங்களுக்கு இருந்து வந்த அலைச்சல், டென்ஷன் பிரச்சினைகள் எல்லாம் குறையக் கூடிய ஒரு அமைப்பு, நெருங்கியவர்களால் அனுகூலங்கள், வெளியூர் தொடர்புகள்மூலம் ஏற்ற மிகுந்த பலன்களை அடையக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடைய ஆரோக்கியமும் சிறப் பாக இருக்கும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்களுடைய அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். குறிப்பாக உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து ஒரு சில அனுகூலங்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு.
ஒரு ராசியில் நீண்டகாலம் தங்கும் கிரகமான சனி தற்போது 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட்டால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கலாம். உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சிறு பாதிப்பு என்றாலும் உடனே மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது வீண் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள மருத்துவக் காப்பீடுகளை எடுத்துக்கொள்வதும் உத்தமம்.” சரி எதி ஆண்டுகோள் என வர்ணிக்கபடக்கூடிய குரு 1-5-2024 முடிய 10-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பக்குவமாக நடந்து கொள்வது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது இக்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும்.

தொழில், வியாபாரத்தில் மிகவும் நிதானமாக நடப்பது, அதிக முதலீடுகொண்ட செயல்களில் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வரும் 1-5-2024 முதல் குரு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் ஒரு உன்னதமான அமைப்பாகும். குரு மாற்றத் துக்குப் பிறகு குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு, குழந்தைகளால் அனுகூலங்கள், பிறருக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம், பூர்வீகச் சொத்துகளால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லாவிட்டாலும் உங்கள் தனித்திறமையால் எதிலும் சிறப்பாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். ஒரு சிலருக்கு தொழில் முன்னேற்றத்திற்காக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

கூட்டாளிகள் ஆதரவு மிகச்சிறப்பாக இருப்பதால் அவர்கள் உதவியுடன் இருக்கக்கூடிய சிறுசிறு நெருக்கடிகளை எளிதில் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் தேடி வருவது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். உடல் வேலை செய்பவர்கள் ஒரு சில இடையூறுகளை உங்களுக்கு தந்தாலும் நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு அனைத்தையும் சமாளித்து அனுகூல பலன்களை அடைவீர்கள் புதிய வாய்ப்புக்காக ஒருசிலர் வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் இருக்கிறது. மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் கணவன்- என்றாலும் உறவினர்களிடம் பேசுகின்றபோது மட்டும் சற்று பக்குவமாகவும், பொறுமையுடனும் நடந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9. நிறம்: வெள்ளை, சிவப்பு கிழமை: திங்கள், வியாழன் கல்: முத்து. திசை: வடகிழக்கு. தெய்வம்: வெங்கடாசலபதி,

பரிகாரம்
கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி 8-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை களில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் வெங்கடாசலபதியை வழிபடுவதாலும், அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது, சுருப்பு நிற வஸ்திரம் சாற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யவும். குரு 10-ல் 1-5-2024 வரை சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற மலர்களால் அலங்கரித்து, கொண்டை கடலை மாலைச் சாற்றி, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள், கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள்நிற பூக்களை அணிவது நல்லது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles