Thursday, May 9, 2024
-- Advertisement--

RRR Movie: தலைக்கனம் இல்லாத மனிதர் விஜய்.விஜயை புகழ்ந்து தள்ளிய JUNIOR NTR ..!!!

RRR உலகம் முழுவதும் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் இந்த திரைப்படத்தை இயக்கியவர் பாகுபலி இயக்குநர் ராஜமௌலி என்பதால் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தெலுங்கு மொழி மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் திரைப்படம் வெளியாக உள்ளது. தெலுங்கு திரையுலகினரை பொருத்தவரை தங்களது படங்களை மார்க்கெட் செய்ய அங்கு உள்ள ஹீரோக்கள் நன்றாக சப்போர்ட் செய்து வருகிறார்கள். குறிப்பாக சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுன் அவர்களின் புஷ்பா திரைப்படத்தை மார்க்கெட் செய்வதற்காக அல்லு அர்ஜுன் சென்னை மும்பை என்று ஊர் ஊராகச் சென்று தனது படத்தை நல்ல வியாபாரம் செய்தார்.

இந்த யுத்தியை தொடங்கி வைத்ததே ராஜமௌலி அவர்கள்தான் பாகுபலி படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு அதற்கான பிரமோஷன்களை சரியான முறையில் செய்து அதில் வெற்றியும் கண்டார். அதுபோல ராஜமௌலியின் இயக்கத்தில் வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி ரிலீஸாகவுள்ள RRR படத்திற்கு 2 மாதத்திற்கு முன்பே அந்த படத்தின் ஹீரோ ஜூனியர் NTR , ராம் சரண் இருவரையும் கூட்டிக்கொண்டு சென்னை மும்பை ஹைதராபாத் போன்ற இடங்களில் மார்க்கெட்டிங் செய்து உள்ளார் ராஜமௌலி.

சமீபத்தில் படத்தின் மார்க்கெட்டிங்காக சென்னை வந்திருந்த ஜூனியர் என்டிஆர் ராம்சரண் அவர்களை அழைத்து விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் அதில் கலந்து கொண்ட ஹீரோக்கள் அந்தப் படத்தை பற்றியும் அந்த படத்தில் நடித்த விஷயங்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டனர் அப்பொழுது விஜய் டிவி தொகுப்பாளினி டிடி அவர்கள் தளபதி விஜயின் புகைப்படத்தை காட்டி ஜூனியர் என்டிஆர் அவர்களிடம் விஜய் பற்றி கேட்டதற்கு JUNIOR NTR சூப்பர் ஸ்டார் அந்த சூப்பர்ஸ்டார் என்ற தலைக்கனம் கொஞ்சம் கூட அவருக்கு இல்லை. தளபதி விஜயுடன் பேசிய அனுபவங்கள் பற்றி சொல்லுங்களேன் என்று கேட்க நிறைய இருக்கமா அவரோட போன்ல பேசினேன் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு அற்புதமான மனிதர் எவ்வளோ அவரை பற்றும் சொன்னாலும் அது போதாது. தலைக்கனம் இல்லாமல் இருப்பார் என்னுடைய நண்பர் அவர் நண்பர் தாண்டி என்னை வழி நடத்தியவர். நான் அவருடைய நடனத்திற்கு பெரிய ரசிகன் என்று கூறியிருந்தார்.

தெலுங்குவில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் மாஸ் ஹீரோ தமிழ்நாட்டின் விஜய்யை புகழ்ந்து கூறியிருப்பது பெருமைக்குரிய விஷயம் தான்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles