ஜோதிகா, பிரபல நடிகை நக்மாவின் தங்கை. இவர் தல அஜித்தின் “வாலி” என்ற படத்தின் மூலம் தமிழ்க்கு அறிமுகம் ஆனார். அதன் பின் சூர்யாவுடன் “பூவெல்லாம் கேட்டுப்பார்” என்று படத்தில் நடித்தார். தளபதி விஜயின் “குஷி” படத்தில் நடித்து மாபெரும் முன்னணி நடிகை என்று தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார்.
சூர்யாவிற்கும், ஜோதிகாவிற்கும் ஏற்பட்ட நட்பு நாள் அடைவில் காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆனது. அதன் பின் சூர்யா தனது தந்தை சிவகுமாரிடன் தனது காதலை தெரிவித்தார். முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவகுமார் பிறகு ஜோவை மருமகளாக ஏற்று கொண்டார். தற்பொழுது ஜோ விற்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி இருந்த ஜோதிகா தனது கணவர் அனுமதியுடன் பெண்களுக்கும், சமூகத்துக்கும் விழிப்புணர்வு தரும் கதைகளை மட்டும் தேர்ந்து எடுத்து நடிக தொடங்கினர். அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. 36 வயதினிலே, ராட்சசி போன்ற படங்கள் வெற்றியை பெற்றது.
இதையும் படிங்க: சித்தி காஜல் அகர்வாளுடன் சேட்டை செய்யும் குட்டி பையன்..!!!புகைப்படங்கள் உள்ளே.
சமீபத்தில் விருது வழங்கும் விழாவிற்கு சென்று இருந்த ஜோதிகா அங்கு பேசியதை சிலர் சர்ச்சை ஆகிவிட்டனர். அந்த விழாவில் “நான் தஞ்சாவூரில் ஷூட்டிங்கு சென்றேன் அங்கு உள்ளவர்கள் அங்கு உள்ள பெரிய கோவிலை பார்க்க அழகாக இருக்கும் பாருங்கள் என்றார்கள். எனது அடுத்த நாள் ஷூட்டிங் ஒரு மருத்துவமனையில் இருந்தது . அங்கு நான் பார்த்த விஷயத்தை சொல்ல முடியவில்லை. கோயிலுக்காக அவளோ காஸ் உண்டியலில் போடுறீங்க, பராமரிக்குறிங்க, பெயின்டிங் பண்றீங்க ப்ளீஸ் அதையே காசா பள்ளிகளில் போடுங்க, மருத்துவமனையில் போடுங்க. மருத்துவமனையை பார்த்த நான் கோவிலுக்கு செல்லவில்லை” என்று கூறினார்.
ஜோதிகாவின் இந்த பேச்சு ஒரு சிலரால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜோதிகா பேசியது தவறு என்று அவரை தாக்கி சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர். உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் செய்யுங்கள்.