Sunday, May 5, 2024
-- Advertisement--

பாவம் திமுக அமைச்சருக்கு தண்ணிரில் கண்டம்… என ட்விட்டரில் விமர்சித்த ஜெயக்குமார்…!!!

கடல் தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதை கூட தாங்கமுடியாத ஒருவராக மீன்வளத் துறைக்கு அமைச்சர் என்று அனிதா ராதாகிருஷ்ணனை முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காட்டில் உப்பங்கழி ஏரியும் கடலும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்ட மணல் அரிப்பால் நுழைவுவாயில் தடைபட்டுள்ளது.

ஆகையால் மீனவர்கள் படகுகள் தரை தட்டி பழுதாகி பெரும் பொருளாதார செலவுகள் ஏற்படுத்துவதாக மக்கள் புகார் அளித்திருந்தனர். அதனை ஆய்வு செய்ய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காடுக்கு வந்தார். அவருடன் ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் மற்றும் எம்எல்ஏக்கள் உடன் சென்று ஆய்வு செய்தனர். அங்கு சென்று ஆய்வுகளை முடித்தபின்பு அமைச்சர் அனிதா கிருஷ்ணன் படகில் இருந்து உப்பங்கழி நீரில் இறங்க தயங்கினார். அதனைக் கண்ட அங்கு உள்ள மீனவர்கள் சிலர் அவரை அலேக்காக குழந்தையை போல் இடுப்பில் தூக்கிக்கொண்டு வந்து கரையில் விட்டனர்.

மேலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மீனவர்கள் தூக்கி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்த வீடியோவ கண்ட முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜெயக்குமார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் பாவம் திமுக அமைச்சருக்கு தண்ணீரில் கண்டம்.. கடல் தாயின் காலில் தழுவுவதை கூட தாங்கமுடியாத ஒருவரா மீன்வளத்துறைக்கு அமைச்சர் வெட்கக்கேடு என்று விமர்சித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles