ஜெயிலர் திரைப்படம் கொடுத்த மாபெரும் வெற்றிக்கு பிறகு நெல்சன் தற்பொழுது தான் ஒவ்வொரு மீடியாவாக பேட்டி கொடுத்து வருகிறார் இயக்குனர் நெல்சன். ஒரு ஹிட் கொடுத்த பிறகு தான் பேட்டி கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருந்தாரோ என்னமோ மனிதர் ஜெயிலர் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன் எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை.
தற்பொழுது JAILER திரைப்படத்தைப் பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வரும் நெல்சனிடம் தளபதி விஜய் BEAST திரைப்படத்திற்கு பிறகு உங்களிடம் என்ன பேசினார் விஜய் உங்களிடம் பேசுவாரா என்று கேட்டதற்கு எப்பவும் என் மேல பிரியமாக இருப்பார்.
BEAST ரிலீஸ்க்கு பிறகு நெல்சனிடம் விஜய் சொன்னது:
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நெல்சா- விஜய்
BEAST திரைப்படம் ரிலீசுக்கு பிறகு நான் அவரிடம் என் மேல எதுவும் உங்களுக்கு கோபம் இருக்கா என்று கேட்டேன் அதற்கு விஜய் சார் யோவ் என்று கூறிவிட்டு சிறிது நேரம் கழித்து என்னை அழைத்து படம் எடுத்தோம் சில பேருக்கு பிடிச்சிருக்கு சில பேருக்கு பிடிக்கல எப்போ நம்ம ஜெனியூனா பண்ணோம். என்கிட்ட என்ன சொன்னியோ அதை நீ எடுத்த அடுத்தவாட்டி வேற மாதிரி பண்ணலாம் என்று கூறினார்.
அப்போ எனக்கு உனக்கும் இருக்கிற பழக்கம் அவ்வளவு தானா ஒரு படம் தானா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நீ கேட்டது. இது இல்லனா இன்னொரு படம் பண்ணுறோம். அது வேற இது வேற என்று விஜய் சார் கூறினார்.
ஜெயிலர் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்:
JAILER திரைப்படம் overseas வெளியான பிறகு ரிசல்ட் பார்த்துட்டு முதல் முதலாக வாழ்த்தியது விஜய் சார் தான் “Congrats Happy for you ” என்று வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.