Saturday, April 27, 2024
-- Advertisement--

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐக்கி வெளியேறியதால் உயிருடன் இருக்க மாட்டேன்… ரசிகரின் வார்த்தையை கேட்டு அதிர்ச்சியடைந்த ஐக்கி பெர்ரி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை நமிதா மாரிமுத்து, நாடியா சாங், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி என பல்வேறு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. வீட்டில் இருக்கும் அனைவருமே தனித்தனியான தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வலுவான போட்டியாளர்கள் என நாம் நினைக்கும் போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக எவிக்ஷனில் வெளியேறி வருகின்றனர். இந்த வாரம் கொரோனா தொற்று காரணமாக கமல்ஹாசன் வார இறுதி நாளில் பங்கேற்கவில்லை அவருக்கு பதிலாக ரம்யாகிருஷ்ணன் வார இறுதி நாட்களை தொகுத்து வழங்கினார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஐக்கி பெர்ரி வெளியேறி உள்ளார். ஐக்கி பெர்ரி மருத்துவர் மற்றும் ராப் இசைக் கலைஞராக பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்து மிகவும் சுறுசுறுப்பான போட்டியாளர் என கூறலாம்.

தினமும் காலை பிக்பாஸ் வீட்டில் பாடல் ஒழிப்பதற்கு முன்பே எழுந்து பாடலுக்கு ஆட்டம் போடுவார் ஐக்கி பெர்ரி. வீட்டில் உள்ள அனைவரிடமும் அன்பாக பழகி வந்தார். எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் க்யூட்டாக வலம் வந்தார். சமீபத்தில் கடந்த சில வாரமாக நிரூப் உடன் சேர்ந்து போட்டிகளை விளையாடினார். நிரூப்புடன் ஏற்பட்ட நட்பு பிரியங்காவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த வாரம் பிக்பாஸ்காக தனது ஹேர்கலரிங் செய்து கொண்டார்.

மேலும் நேற்று இரவு பிக்பாஸ் ஏவிக்ஷனை வீட்டிலிருந்தபடியே ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் வந்து உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் வெளியேறியதால் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என உணர்ச்சி வசமாக தெரிவித்துள்ளார். அதைக்கேட்டதும் அரண்டு போன ஐக்கி அந்த மாதிரி ஒரு முடிவை சொல்லக்கூடாது நான் வெளியே வந்த பிறகும் சந்தோஷமாக இருக்கிறேன் என ரசிகர்கள் இந்த அளவிற்கு பாசத்தை தருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் பாசத்திற்கு மிகவும் நன்றி என ரசிகர்களுக்கு பக்குவமாக அறிவுரை கூறினார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles