Thursday, May 9, 2024
-- Advertisement--

தமிழகத்தில் முதல் முறையாக மாநகராட்சி பள்ளி சமையல் கூடத்திற்கு ISO தரச்சான்று…!!! தலைமை ஆசிரியைக்கு குவியும் பாராட்டு.

தமிழகத்தில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி கூட்டமைப்பு வசதியை மேம்படுத்தி உள்ளார். ஈரோட்டை சேர்ந்த தலைமையாசிரியர் அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் முயற்சியால் முதல் முறையாக சமையல் கூடத்திற்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் கிடைத்துள்ளது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 -ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 1061 மாணவிகள் படித்து வருகின்றனர்.

மேலும் பள்ளியில் உள்ள சமையல் கூடம் சுகாதாரமற்ற முறையில் இருப்பதோடு பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்துவதை கண்டு தலைமையாசிரியர் மாலா அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து சமையல் கூடத்தை அழகு படுத்த முயற்சி செய்தார். அதோடு சமையல் கூடம் முழுவதும் டைல்ஸ் கொண்டு செக் பண்ணிட்டு வர்ணம் அடிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை சமையல் கூடத்தில் இருந்து முற்றிலும் தவிர்த்து விட்டார்.

அதோடு பெற்றோர்களிடம் கல்வி சீராக சமையல் கூடத்திற்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண் பாத்திரங்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மாணவிகளுக்காக பள்ளியில் ஆர்.ஓ தண்ணீர் பொருத்தினார். மேலும் ஆர்.ஓ தண்ணீரில் மட்டுமே சமைக்க வேண்டும் கடைகளில் வாங்கிய காய்கறிகளை சமைப்பதற்கு முன் மஞ்சள் கலந்த நீரில் கழுவவும் வழிவகை செய்தார்.

மேலும் சமையலர்கள் நகங்கள் பெற்றிருக்கவேண்டும் வளையல் மற்றும் மோதிரங்கள் அணிந்திருக்கக் கூடாது என்றும் முடி உணவில் விழாமல் இருக்க தலையில் தொப்பி அணிய வேண்டும் என தலைமையாசிரியர் உத்தரவிட்டார். மேலும் பள்ளியிலேயே ஆர்கானிக் காய்கறி தோட்டம் அமைத்து அதில் விளையும் காய்கறிகளை வாரத்திற்கு ஒரு முறை சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் மாணவிகள் சாப்பிட பயன்படுத்தும் தட்டகள் வெந்நீரில் சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் மாணவிகளுக்கு வெந்நீர் மட்டுமே கொடுக்க உத்தரவிட்டார்.

இவைகள் அனைத்தும் முறையாக நடக்கிறதா என்று அறிய இரண்டு சிசிடிவி கேமராவை சமையலறையில் ஒருத்தி கண்காணித்து வருகிறார். மேலும் ஆய்வுக்கு வந்த சத்துணவு ஒருங்கிணைப்பாளர்கள் கொடுத்த உற்சாகத்தில் சமையல் கூடத்திற்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்கபட்டது. இதன்படி பள்ளியின் சமையல் இடத்தில் நான்கு முறை ஆய்வு செய்தனர். ஆகையால் கடந்த மாதம் இந்த பள்ளியின் சமையல் குறிப்பு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கினார்.

தமிழகத்தில் முதல் முறையாக மாநகராட்சி பள்ளி கூடத்திற்கு தரசான்றிதழ் கிடைக்க ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் தலைமையாசிரியர் மாலா நன்றியை தெரிவித்துக் கொண்டார். சமையல் கூடம் மட்டுமின்றி பள்ளிகளில் ஒவ்வொரு கட்டிடங்களும் தமிழகத்தின் வீர மங்கைகள் பெயரும் பள்ளியின் நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க, வகுப்பறைகளில் முன் ஊஞ்சல் கட்டி விளையாடும் மாணவிகளுக்கு இரும்புச் சத்து கிடைக்க முருங்கைக்கீரை சூப் வழங்குதல் டிஜிட்டல் நூலகம் அமைத்தல் என இந்த நகராட்சி பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக திகழ்ந்து வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles