Sunday, May 12, 2024
-- Advertisement--

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக இந்த நடிகையா ..? இவர் பிரபல நடிகரின் மனைவி ஆச்சே..!!!

தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து மாஸான ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக நடித்து வெளிவந்த படம் அண்ணாத்தே. அந்த படத்தை தொடர்ந்து தற்பொழுது சூப்பர் ஸ்டார் லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. சூப்பர் ஸ்டார் நடிக்கும் இந்த படத்தின் இயக்குனர் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக தமிழ் மற்றும் தெலுங்கு புகழ்பெற்ற நடிகர் ஆன ராஜசேகரின் மனைவி ஜீவிதா நடிக்க உள்ளார். இவர் 1998 ஆம் ஆண்டு வளைகாப்பு என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 25 வருடங்களாக இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி கொடுக்க உள்ளார்.

இதனால் ரஜினிகாந்த் அண்ணன் தங்கை கோம்போ பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஜீவிதா கேரக்டர் படத்தில் மிகப்பெரிய திருப்பு முறையாக அமையும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு அண்னாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles