Sunday, May 5, 2024
-- Advertisement--

தளபதி 67 லியோ படத்திற்கும் கார்த்தியின் கைதி படத்திற்கும் தொடர்பு இருக்கா.? இத நோட் பண்ணிங்களா.!

தளபதி விஜயின் வாரிசு படம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார் தளபதி விஜய்.

தளபதி 67 படத்தை மாபெரும் வெற்றி இயக்குனரான லோகேஸ் கனகராஜ் இயக்குகிறார். மாநகரம் என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன லோகேஷ் கனகராஜ் முதல் படத்திலேயே அனைத்து நடிகர்களின் கவனத்தை ஈர்த்ததால் இவருக்கு அடுத்தடுத்து பெரிய நடிகர்களை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதனை அடுத்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு விருதுகளும் குவிந்தது. லோகேஷ் கனகராஜ் தீவிர உலகநாயகன் கமலின் பக்தன். அவரை வைத்து விக்ரம் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து படம் இயக்குகிறார். 67வது விஜய் படத்தில் நடிகை பிரியா ஆனந்த், திரிஷா, அர்ஜுன் போன்ற பல நடிகர்கள் நடிக்கின்றனர் என்பது ஏற்கனவே தெரிந்தது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டிலும் ப்ரோமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது படத்தின் டைட்டில் “லியோ” என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

படத்தின் பிரமோவில் ஒரு பக்கம் விஜய் சாக்லேட் தயாரிக்கிறார். மறுபக்கம் கத்தி தயாரிக்கிறார். இறுதியில் கத்தியை சாக்லேட்டில் நினைத்து ஸ்வீட் என சொல்லி முடிக்கிறார் விஜய். அக்டோபர் 19ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

இந்த ப்ரோமோவில் விஜய் பேக்கரியில் சாக்லேட் தயாரிக்கிறார். ஏற்கனவே கைதி படத்தில் கார்த்தி பேக்கரியில் வேலை பார்த்ததாக கூறியிருப்பார். இதில் லோகேஷ் இரு படத்திற்கும் தொடர்பு உள்ளது போல் கணிப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles