Saturday, May 4, 2024
-- Advertisement--

அய்யா YOUTUBERS கொஞ்சம் கருணை காட்டுங்க கஷ்டப்படுறேன் கூல் சுரேஷ் உருக்கமான பதிவு..!!!

தமிழ் சினிமாவில் சாக்லேட் என்ற படத்தில் அறிமுகமான கூல் சுரேஷ் அவர்கள் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

   இவரது காமெடி கவுண்டர்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் படத்தில் சந்தானத்துடன் நடித்தது அனைவருக்கும் பிடித்த ஒன்று.

    பகண் youtubeபில் அனைத்து படங்களின் ரிவ்யூவை பதிவிட்டு சம்பாதித்து வந்தார். இவர் சிம்பு அவர்களுக்கு ஆதரவாக பல வீடியோக்களில் பேசியுள்ளார்.

அவர் தற்பொழுது மன்சூர் அலிகான் அவர்களின் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளிவர இருக்கும் சரக்கு படத்தின் ஆடியோ லாஞ்சில் சுரேஷ் அவர்கள் தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்தார்.

அதற்காக மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோவை போட்ட கூல் சுரேஷ் அவர்கள் தான் மரியாதைக்காக தான் தொகுப்பாளினிக்கு மாலை போட்டதாக கூறினார்.

அவர் மீண்டும் ஒரு வீடியோவை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது, தான் மரியாதைக்காக செய்த ஒரு காரியம் இவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை என்றும் அதற்காக அவர் மன்னிப்பு கேட்டதையும் யாரும் பொருட்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இவருக்கு வந்து அறிவுரை கூறியுள்ளார்கள்.

பின் அவர் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலி என்றும் தற்பொழுது அவரிடம் பணம் இல்லாததைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அதனால் இவரை வைத்து youtube இல் வீடியோவை போட்டு சம்பாதித்த அனைவரிடமும் தாழ்மையுடன் உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் மன்சூர் அலிகான் அவர்களின் இறக்க குணத்தை கொண்டு தனக்கு  ஏதாவது உதவுமாறு மன்சூர் அலிகானை கேட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles