கொரானோ வைரஸ் உலகெங்கும் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்கு உத்தரவால் பலர் தங்கள் வேலைகளை இழந்து அன்றாட பிழைப்பிற்கே திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் இல் இருந்து காப்பதற்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமென்று பல நாடுகளிலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வறுமையில் வாடுபவர்கள் முககவசம் வாங்கவும் வழியின்றி தவித்து வரும் நிலையில், இந்தியாவில் புனைவை சேர்ந்த பணக்காரர் ஒருவர் தங்கத்தில் முக கவசம் செய்து அணிந்து வருவது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.
கொரானோ பரவலை தடுக்க அத்தியாவசிய ஒன்றான மாஸ்க் பல்வேறு வடிவங்கள் மற்றும் பல்வேறு தரங்களில் கிடைக்கின்றன. சிலர் மாஸ்க் பயன்படுத்தாமல் கை குட்டைகளையும், துப்பட்டா, டவல் போன்று தங்களிடம் இருப்பதைக் கொண்டே பயன்படுத்தி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சேர்ந்த சங்கர் என்பவர் தங்கத்தில் மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து வருகிறார். இந்த மாதத்தின் விலை 2.89 லட்சம்.
இதில் சிறிய சிறிய துளைகள் மூச்சு விடுவதற்காக இடப்பட்டுள்ளன. ஆனால் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க இந்த மாஸ்க் உதவுமா என்பது சந்தேகம். தங்க நகைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சங்கர் தங்க மாஸ்க் அணிந்து போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் செய்தி நிறுவனம் ஒன்றில் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியும் வருகின்றன.