நாடு முழு தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் ஊரடங்கு தொடருவதால் சொந்த மாநிலம், சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல், ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இவ்வாறு தவிப்போரை, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்கும் படி பல்வேறு மாநில அரசுகளும், ரயில்வேய்க்கு கோரிக்கை விடுத்தன.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, மாநில அரசு அனுமதியுடன் அழைத்து வரப்படும் பயணியர் மட்டுமே, சிறப்பு ரயில்களில் செல்ல அனுமதிக்கப்படுவர், பயணிகர்களை பாதுகாப்பாக அழைத்து வர மாநில அரசு பிரத்யேக ஏற்பாடு செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ள படுகிறது.
மாநில அரசு கேட்டு கொண்ட சிறப்பு ரயில் தவிர வேற எந்த ரயிலும் இயக்கபடாது. தனியாக அல்லது குழுவாக வரும் யாருக்கும் நிலையத்தில் அனுமதி இல்லை. ஊரடங்கு முடியும் வரை மக்கள் எந்த நோக்கத்திற்காகவும் ரயில் நிலையங்களுக்கு வர வேண்டாம் என அதிகாரிகள் கூறினர்.