லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அப்போது நடந்த கல் வீச்சு தாக்குதலில் ஒரு இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர்.
இறந்த இரண்டு ராணுவவீர்களில் ஒருவர் பெயர் பழனி என்றும் இவர் ராமநாதபுரத்தை சேர்ந்த கடுகல்லுர் கிராமத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இந்த செய்தி அறிந்தவுடன் தமிழகத்தில் உள்ள அரசியல் பிரமுகர் மற்றும் பொது மக்கள் அனைவரும் தங்களது இரங்கலை சமூகவலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கலை தெரிவித்து வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் திரு.பழனி அவர்களின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும். அது போல பழனி அவர்களின் குடும்பத்தில் ஒருவர்க்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.