Wednesday, September 18, 2024
-- Advertisement--

பணியை 1வருடத்தில் நிறைவு செய்து விட்டு குடும்பத்துடன் இருக்க ஆசைப்பட்ட ராணுவவீரர் பழனி..!!! நிறைவேறாமல் போன ஆசை – மனைவி உருக்கம்.

ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கழூரைச் சார்ந்த விவசாயி காளிமுத்து என்பவரின் மகன் தான் பழனி வயது 40. இவர் தனது 18 வயதிலே நாட்டை காக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் ராணுவத்தில் சேர்ந்தார். தற்பொழுது பழனி ஹவில்தார் அந்தஸ்தில் இந்தியா – சீன எல்லை பகுதியான லடாக் கல்வார் பகுதியில் பணிபுரிந்து வந்தார். இந்தியா – சீன எல்லையில் நடந்த தாக்குதலில் ராணுவவீரர் பழனி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த செய்தியை பழனியின் அண்ணன் இதயக்கனி மூலமாக அவரது வீட்டிற்கு தகவல் சொல்லப்பட்டது. இதயக்கனி ராஜஸ்தானில் ராணுவவீரக பணிபுரிந்து வருகிறார்.

பழனி இறந்த செய்தி கேட்ட அவரது மனைவி வானதிதேவி கதறி அழ தொடங்கினர். பழனிக்கு 10 வயதில் பிரசன்னா என்ற மகனும், 8 வயதில் திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். பழனி ராமநாதபுரம் அருகில் உள்ள கழுகூரணி கஜினி நகரில் நிலம் வாங்கி வீடு ஒன்றை கட்டி உள்ளார். அந்த வீட்டில் நிலைப்படி வைப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் வந்து சென்று உள்ளார்.

பழனி அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3 அன்று வீடு காய்ச்சியபோது மனைவியிடம் பேசியுள்ளார். அதன் பின் ஜூன் 6 அன்று திருமண நாள் அன்று பேசியுள்ளார். ஓராண்டு கழித்து பணியை நிறைவு செய்துவிட்டு வீட்டில் வசிக்கலாம் என்று பழனி தனது மனைவியிடம் கூறியுள்ளார். இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி கதறி அழுதார் அவரது மனைவி. பழனி அவர்களின் உறவினர்கள் பழனியின் இறப்பு செய்தி கேட்டு அவர்களது இரங்கலை தெரிவித்து கொண்டு உள்ளார்கள்.

டெல்லியில் இருந்தது பழனியின் சொந்த ஊரான கடுக்கழூருக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles