Monday, May 20, 2024
-- Advertisement--

இந்தியா : கடும் மழையால் பாதிக்கப்பட்ட விமான நிலையங்கள் சிறப்பு சோதனை நடத்தப்பட உள்ளன…!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 191 பேருடன் தரையிறங்க முயன்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 191 பேரில் 18 பேர் மரணமடைந்தனர். இதில் விமத்தை இயக்கம் இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளனர். ஒரு குழந்தைகள் உட்பட 16 பேர் மரணம் அடைத்துள்ளனர். இதனால் இந்தியாவே மிகப்பெரிய சோகத்தில் உள்ளது.

விபத்திற்கு முக்கிய காரணமே தரைத்தளத்தில் இறங்கும்போது மழை அதிகமாக பெய்ததால்தான் என்று கூறப்படுகிறது. அதனாலேயே இந்தியா முழுவதும் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கனத்த மழையால் பாதிக்கப்பட்ட விமான நிலையங்களில் சிறப்பு பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த தகவலை அதிகாரி ஒருவர் REUTER செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பருவ மழையால் பாதிக்கப்பட்ட முக்கியமான போக்குவரத்து அதிகமுள்ள விமான நிலையங்களை சோதனை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஓடுபாதைகள், அவற்றின் சாய்மானம், விளக்குகள், வடிதல் போன்ற அனைத்தையும் சோதிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களும் சோதிக்கப்பட இருக்கின்றன.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles