உலகெங்கும் பாதித்து வரும் கொரானா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே வருகின்றது இது உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியா கடந்த 12 மணி நேரத்தில் 14,000 தொற்று உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது .
இந்த நிலையில் இந்தியாவில் கொரானா பரவல் மிக மோசமாக உள்ளதால் ஸ்டேஜ் 3 நாம் நுழைந்து விட்டோம் என்று இந்தியன் மெடிகல் அசோஷியேஷன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ எம் ஏ தலைவர் தெரிவித்துள்ள கருத்தில் இந்தியாவில் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளதுகொரானா. தினமும் அதிகம் தோற்று உள்ளவர்கள் காணப்படுவதால் இந்தியாவில் மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு முன்பு நகரங்களில் இருந்த கொரானா தற்போது கிராமங்களிலும் படையெடுக்க தொடங்கி விட்டதால் ஸ்டேஜ் 3 பரவல் ஏற்பட்டுவிட்டதாக கூறுகின்றது. இதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் கிராமம் முழுக்கவே வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளதால் நினைத்ததை விட இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், இதை தடுக்க 70% பேருக்கு தொற்று எற்பட்டு சரி ஆகும் அல்லது தடுப்பு ஊசி கன்டுபிடிப்பதை விட வேறு வழி இல்லை என்றும் அது கூறியுள்ளது.
கேரளாவிலும் திருவனந்தபுரம் போன்ற பகுதிகளிலும் ஏற்பட்டு உள்ளதாக அந்த மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் மத்திய அரசோ அல்லது தமிழகமோ என்னும் சமூக பரவல் ஏற்பட்டு விட்டதை ஒப்புக் கொள்ளவில்லை இருப்பினும் புதிய திருப்பமாக இந்தியன் மெடிகல் அசோஷியேஷன் இந்தியாவில் சமூக பரவல் ஏற்பட்டுவிட்டது என்று கூறியுள்ளது. மக்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இல்லாமல் உலகம் எப்போது அதன் இயல்பு நிலையை அடையும் என்று பெரும்பாலான உலக மக்களை தற்போது காத்துக் கொண்டிருக்கின்றனர்.