பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ம் ஆண்டில் பதவியேற்ற பிறகு பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்கு உள்ள நாட்டு நடப்புகளை கூர்ந்து கவனித்து இந்தியாவை எப்படி வளமான நாடாக மாற்ற வேண்டும் என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாராம். அந்த நேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களை சந்தித்து இந்தியாவின் வளர்ச்சிக்காக பல்வேறு ஒப்பந்தங்களை செய்தாராம்.
கொரோனா பரவல் உலக நாடுகளில் அதிகமாக பரவி தவித்து வந்தபோது தாமாகவே முன் வந்து முக கவசம், சனிடைசர், பாதுகாப்பு உடைகள், மருத்துவ கருவிகள் போன்றவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி உதவியுள்ளது இந்தியா அதனால் தான் இந்தியாவில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாம் நிலை தீவிரமாக உள்ளதால் பல்வேறு நாடுகளிலிருந்து கேட்காமலேயே உதவி செய்து வருகின்றனர்.
குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல் போன்ற நாடுகள் தாமாகவே முன்வந்து உதவி செய்து வருகிறது. இதற்கு ஒரே காரணம் பிரதமர் மோடி பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சேர்ந்து இந்தியா உடனான உறவை பலப்படுத்தியதால் இப்போது அனைத்து நாடுகளும் இந்தியாவிற்கு உதவுகிறது என்று கூறிவருகிறார்கள் பாஜகவினர்.