Tuesday, April 30, 2024
-- Advertisement--

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்..!!! அம்மாவின் எதிரி திமுக ஆட்சியில் அமரக்கூடாது..!!! அக்கா ஜெயலலிதாவின் ஆட்சி அமைய ஒற்றுமையுடன் செயல்படுங்கள்- சசிகலா திடீர் அறிக்கை.

சிறை தண்டனை முடிந்து அக்ரஹார சிறையில் இருந்து வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை சசிகலாவின் அரசியல் வருகையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் அவரது தொண்டர்கள். சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று சசிகலா அரசியலிலிருந்து விலகிக் கொள்வதாக திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் நாம் என்றும் வணங்கும் எனக்கா புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் புரட்சி தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும் என்று கூறியிருந்தார் அதனை தொடர்ந்து நம்முடைய பொது எதிரி தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுக ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிய அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் என் மீது அன்பும் அக்கரையும் காட்டியே அம்மாவின் உண்மை தொண்டர்களும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உணர்வு பூர்வமான நன்றிகள் என்று கூறியிருந்தார்.

அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன் என்று கூறியுள்ள சசிகலா நான் என்றும் பதவிக்கும் பட்டத்திற்கும் அதிகாரத்துக்கும் ஆசைப்பட்டதில்லை புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் எனக்கா புரட்சித்தலைவி இடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசியலில் இருந்து விலகிக்கொண்டார் சசிகலா.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles