Saturday, June 21, 2025
-- Advertisement--

சிவகார்த்திகேயன் செய்த மாபெரும் துரோகம் பிரபல இசையமைப்பாளர் இமான் வருத்தம்…!!! இமான் விவகாரத்திற்கு SK தான் காரணமா…?

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகத்தை செய்து விட்டதாகவும் இனி சிவகார்த்திகேயன் படத்திற்கு இசை அமைக்க மாட்டேன் என்று வருத்தத்தோடு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் இசை அமைப்பாளர் இமான். சமீபத்தில் தான் D இமான் அவர்கள் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இமான் சிவகார்த்திகேயன் உறவு ஒரு அண்ணன் தம்பி உறவுக்கு இணையாக இருந்ததது. சிவகார்த்திகேயன் படத்திற்கு இமான் மற்றும் அனிருத் மாறி மாறி இசை அமைத்து வந்தார்கள். கிராமத்து சப்ஜெக்ட் என்றால் இமானிடம் சென்று விடுவார். காரணம் சிவா ஹீரோவாக அறிமுகம் ஆன மனம் கொத்தி பறவைக்கு இமான் அவர்கள் தான் இசை அமைத்து இருந்தார். பாடல்களும் ஹிட் பாடலாக அமைந்தது. அதன் பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட பாடல்கள் சிவகார்த்திகேயனுக்கு பெரிய ஹிட் ஆல்பம் ஆக அமைந்தது. குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற ஊதா கலரு ரிப்பன் பாடல் பட்டி தொட்டி எங்கும் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. அதன் பின் ரஜினி முருகன் பாடல்களும் பெரிய ஹிட் அந்த படத்தில் இதன் பெற்ற என்னம்மா இப்படி பண்றிங்களே மா பாடல் மாபெரும் வெற்றி பெற்றது . இப்படி ஒரு வெற்றி கூட்டணி சில படங்களுக்கு ஒன்று சேராமல் இருந்தார்கள்.

இது பற்றி கோலிவுட் வட்டாரத்தில் சில பத்திரிகையாளர்கள் பல மாதங்களுக்கு முன்பே SK இம்மானுக்கு இடையே சில மனக்கசப்புகள் உள்ளதாகவும், சிவகார்த்திகேயன் இசை அமைப்பாளர் இமானுக்கு பெரிய துரோகத்தை செய்துவிட்டாகவும் கூறி வந்தனர். சினிமாவில் இது சகஜம் தானே இசை அமைப்பாளர் ஹீரோக்கள் ஏதாவது சண்டைகள் வருவதும் அதன் பின் சேருவதும் இயல்பு தானே என்று ரசிகர்கள் நினைத்து கொண்டு இருக்கையில் சிவகார்த்திகேயன் இமான் குடும்பத்தில் விளையாடிவிட்டாக எல்லாம் தகவல்கள் இணையத்தில் வெளிவந்து கொண்டு இருந்தது.

சினிமாவில் மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி அவர்கள் கூட தன்னை சகோதரர் போன்று நினைத்த ஒருவரின் குடும்பத்தில் பொறுக்கித்தனம் செய்ய எப்படி மனம் வந்தது என்று மறைமுகமாக பதிவிட்டு இருந்தார்.

தற்பொழுது அது அனைத்து செய்திகள் உண்மை என்பது போல இசை அமைப்பாளர் பேட்டி ஒன்றை கொடுத்து உள்ளார். அதில் சிவகார்த்திகேயன் எனக்கு பெரிய துரோகத்தை செய்துவிட்டார். இந்த ஜென்மத்துல சிவகார்த்திகேயன் படத்திற்கு இசை அமைக்கமாட்டேன். அவர் எனக்கு பண்ணது மிக பெரிய துரோகம் அதை என்னால வெளில சொல்ல முடியாது.இனி வரும் காலங்களில் சேர்ந்து பயணிக்கமாட்டேன் என்று கூறிய அவர் அடுத்த ஜென்மத்தில் அவர் நடிகனாக இருந்து நான் இசைமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய இமானிடம் பத்திரிகையாளர் நீங்க நல்ல மனிதராக இருக்கீங்க வெளிப்படையா பேசுறீங்க உங்களுக்கு எப்படி துரோகம் செய்ய முடியும் நீங்கள் ஏன் எனக்கு துரோகம் செய்திர்கள் என்று கேட்டீர்களா என்று கேட்க அதற்கு பதில் அளித்த இமான் துரோகம் அப்படி தான் நடக்கும் சார். நானே துரோகத்தை லேட்டாக புரிஞ்சிக்கிட்டேன். அவரிடமே ஏன் இப்படி துரோகம் செஞ்சிங்கனு கேட்டேன் ஆனால் அவர் கூறியதை வெளியில் கூறமாட்டேன் என்று வருத்தத்தோடு கூறி உள்ளார் இமான்.சில விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அது ஏன் குழந்தைகளுக்காக தான் என்று கூறி உள்ளார் இமான்.

இவர் மட்டும் தான் அதற்கு காரணம்னு சொல்ல முடியாது இவரும் ஒரு காரணம் ஒரு குடும்பம் போல இருந்து கொண்டு இப்படி ஆனது எனக்கு பெரிய வலியை கொடுத்தது என்று கூறி உள்ளார் இமான்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles