Monday, May 20, 2024
-- Advertisement--

அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் “வலிமை” படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்து வெளியான தகவல்…!!!

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கும் வலிமை திரைப்படத்தில் சென்சார் சான்றிதழ் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது .அதோடு ஹச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்து உள்ளார். மேலும் இப்படத்தில் யோகிபாபு, சுமித்ரா, ஹூமா குரேஷி போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு நீரவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதோடு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

வலிமை திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றாக படக்குழு வெளியீடு வருகிறது. சமீபத்தில் அஜித் “WHEELING ” செய்யும் போது கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தன.

இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் தற்போது படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி தற்போது வலிமை படத்திற்கு “U/A ” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித் தன்னுடைய அடுத்த படமான அஜித் – 61 படத்தையும் ஹச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles