Friday, May 3, 2024
-- Advertisement--

பிரபல நிறுவனமான HCL தலைவராக பொறுப்பேற்கிறார் ஷிவ் நாடாரின் மகள் ரோஷிணி.

தகவல் தொழில்நுட்பத்தில் பெரிய நிறுவனமான எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார். இவர் இந்த பதவியில் இருந்து விடுபடுவதாகவும் இந்த பதவிக்கு தனக்கு பதிலாக தனது மகள் ரோஷினி மல்ஹோத்ரா இந்த பொறுப்பை ஏற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஷிவ் நாடார் இந்த பதவியில் இருந்து விலகினாலும் எம்டி பதவியில் அவர் இருப்பார் எனவும் அந்த நிறுவனத்தின் தலைமை உக்தி அதிகாரியாக இருப்பார் எனவும் அது தெரிவித்துள்ளது.

ரோஷினி நாடார் மல்ஹோத்ரா வை இயக்குனர்கள் குழு தலைவராக நியமித்து உள்ளது. இயக்குனர்கள் குழு மற்றும் நிறுவனத்தின் முடிவின்படி 17ஆம் தேதி ஜூலை 2020 இல் இருந்து தலைவர் பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்து அவருக்கு பதிலாக ரோஷினி தலைவராகிறார் என அறிவித்துள்ளது.

ரோஷினி என்பவருக்கு வயது 38, இவர் 2019 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸின் உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 54 வது இடத்தை பிடித்திருந்தார். ரோஷினி நாட்டின் பணக்கார பெண்களில் ஒருவராக கருதப்படுகிறார். 2019 ஆம் ஆண்டில் தரவரிசையில் இவரது சொத்து மதிப்பு ரூபாய் 36 ஆயிரத்து 700 கோடியாக இருந்தது.

ரோஷினி ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில், வணிக நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். எச்சிஎல் குழுமத்தில் இவர் பணிபுரிவதற்கு முன்பு பல நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார். எச்.சி.எல் சேர்ந்த ஒரு வருடத்திற்குள் எச்.சி.எல் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles