Sunday, May 19, 2024
-- Advertisement--

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் தினத்தில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #HBDFatherOfCorruption ஹாஸ்டேக்..!!! உங்கள் அரசியல் சண்டைகளுக்கு ஓர் அளவே இல்லையா கோபத்தில் நெட்டிசன்கள்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தந்தையின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய பின் சில நலத்திட்டங்களையும் செய்து வருகிறார்.

குறிப்பாக மெரினாவில் 38 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் .

திமுகவினர் அம்மா உணவகத்தில் கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தை ஆட்சி செய்தது மட்டுமல்லாமல் தமிழ் மொழி மீது அதிக பிரியம் கொண்டவர் கலைஞர் அவர் தன்னால் முடிந்தவரை நிறைய நூல்களை எழுதி விட்டு சென்றுள்ளார். திருவாரூரில் இருந்து ஒரு தனி ஆளாக வந்து சென்னையில் பாடுபட்டு தனி ஆளாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கலைஞரின் புகழ் அனைவரும் அறிந்ததே.

இன்று கலைஞரின் பிறந்தநாளை அம்மா உணவகத்திலும் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் இந்த நேரத்தில் டுவிட்டரில் #HBDFatherOfCorruption என்ற ஹாஸ்டேக் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

திமுக கட்சியையும் தலைவர்களையும் பிடிக்காத ஒரு சிலர் வேண்டுமென்றே இந்த செயலை செய்து வருகின்றனர். நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவர் பிறந்தநாள் தினத்தன்று அவரை இழிவுபடுத்துவது போல இதுபோன்ற செயல்களை செய்து வருவதனால் அவர்களுக்கு என்ன சந்தோசம் கிடைக்கப்போகிறது என்று மக்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதுபோல ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கோவை சென்றபோது #gobackstalin என்ற ஹாஸ்டேக் கிரியேட் செய்து அதனை ட்ரெண்ட் செய்துவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பிடிக்காத ஒரு சிலர் கூட்டம் இதுபோல செய்வது சரியா.

ஸ்டாலினை பொறுத்தவரை தற்பொழுது அரசியல் சண்டைகளை விரும்பாமல் சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் அரசியல் சண்டைகள் இருக்கலாம் அதை உலகம் முழுவதும் தெரியும் படி வேண்டாமே என்று கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles