Friday, May 17, 2024
-- Advertisement--

தனது இரு கைகளை இழந்தும் விஜயின் மாஸ்டர் பாடலுக்கு இசை அமைத்த இளைஞர்…!!! நெகிழ்ச்சி வீடியோ உள்ளே.

அனிருத், இன்றைய இளைஞர்களை எப்படி இசை அமைத்தால் கவரலாம் என்ற பார்முலாவை நன்கு தெரிந்து வைத்து இருக்கும் ஒரே இசை அமைப்பாளர். இவருடைய பாடல்களில் ஒரு அருமையான மெலோடியும் இருக்கும் அதுவே அனிருத் ஸ்பெஷல். எங்கயோ கேட்டது போல இருந்தாலும் மக்களை அதிகம் பிரபலம் ஆவது இவருடைய பாடல்களே.

நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் இன்று வெளியாகி உள்ளது. தளபதி விஜய் நடித்து வெளியாக இருக்கும் “மாஸ்டர்” படத்தின் பாடல்களை அனிருத் இசை அமைத்து இருந்தார். பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. அந்த படத்தில் வரும் “வாத்தி கம்மிங்” பாடல் பிரபலமாகி பல திரை நட்சத்திரங்கள் டிக்டாக் செய்து இணையத்தில் வெளியிட்டு வந்தனர்.

இந்த நேரத்தில் இரு கைகள் இல்லாத ஒரு இளைஞர் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு இசை அமைத்து அதனை இணையத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த “மாஸ்டர்” படத்தின் இசைமைப்பாளர் அனிருத் அந்த இளைஞரை வாழ்த்தி ட்வீட் செய்து இருந்தார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles