Saturday, May 18, 2024
-- Advertisement--

கொரோனா தடுப்பூசியில் மாபெரும் சாதனை – 100 கோடி டோஸை தொட்ட இந்தியா…!!!

உலக அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மக்களை வாட்டி வதைத்தது. மக்களின் நலனுக்காக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு வலியுறுத்தியது. அதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போட தொடங்கப்பட்டது. இந்தியாவில் படிப்படியாக கொரோனா தடுப்பூசி ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதில் முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மாநில அரசுகள் மத்திய அரசிடம் வைத்த கோரிக்கைக்கிணங்க கடந்த மே மாதம் முதல் 18 வயதை கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

மேலும் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி மாநிலங்கள் வாரியாக பிரித்து கொடுக்கப்பட்டது. ஆகையால் இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மத்திய அரசு தேவையான தடுப்பூசிகளை கொள்முதல் செய்து இலவசமாக மாநில அரசிற்கு வழங்கிவருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டி உள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எப்படி உள்ளது. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles