Monday, May 20, 2024
-- Advertisement--

கோவையில் மனித கழிவுகளை அகற்றும் ரோபோக்கள்..! கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்தனர்..!

தமிழ்நாட்டின் தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தொடர்ந்து வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் அண்மையில் நிறைவுற்ற கோவை உக்கடம் பெரியகுளக்கரை நவீனபூங்காவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கோவை மாநகரில் கழிவு நீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் அமைப்புகளை எந்திரம் மூலம் அகற்றுவதற்காக ரோபோக்களை பயன்படுத்தும் முறையை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி தொடங்கி வைத்துள்ளார்.

எஸ். பி. வேலுமணி செய்தியாளரிடம் பேசுகையில் பாதாளச் சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கி அடைப்புகளை அகற்றும் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் இப்பணிகள் ரோபோக்களை பயன்படுத்தும் திட்டம் அனைத்து மாநகராட்சிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் , கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள ஐந்து மண்டலங்களிலும் தலா 2 ரோபோக்கள் வீதம் மொத்தம் 10 ரோபோக்கள் பயன்பாட்டில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் கழிவு நீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகள் அமைப்புகளிலிருந்து எந்திரம் மூலம் அகற்றுவதற்கான ரோபோக்களை பயன்படுத்தும் முறையை செயல்படுத்தி உள்ள கோவை மாநகராட்சி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவரங்கள் துறை அமைச்சர் ட்விட்டர் பக்கத்தின் வழியாக பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மனது வைத்தால் அனைத்து மாநகராட்சிகளிலும் கழிவுகளை அகற்ற ரோபோக்களின் பயன்பாடு நடைமுறைப்படுத்தி, மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தும் அவலங்களை அகற்ற முடியும்’ என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles