Sunday, May 19, 2024
-- Advertisement--

உலகம் முழுவதும் முடங்கியது ஜி-மெயில், யூ டியூப்..! என்னதான் ஆச்சு..?

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உலகம் முழுவதும் ஜி-மெயில் திடீரென முடங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகிலேயே அதிக நபர்கள் பயன்படுத்துவது ஜிமெயில் அக்கவுண்ட். பேங்க் அக்கவுண்டில் பணம் இல்லாதவர்கள் கூட ஜிமெயில் அக்கவுண்ட் வைத்து இருப்பார்கள் என்று கூறும் அளவிற்கு ஏராளமான பயனர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 11 மணி முதல் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் திடீரென ஜிமெயில் முடங்கியுள்ளது.

பலருக்கும் அவர்கள் அனுப்பிய ஜிமெயில் அக்கவுண்ட்டில் இருந்து வரும் மெயில்கள் கிடைப்பதில்லை என்றும் கூறிவருகின்றனர். சிலருக்கு மெயில் அனுப்பவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறிவந்தனர். குறிப்பாக ஐரோப்பாவில் ஒரு சில நாடுகளில் மற்றும் அமெரிக்கா, இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட மொத்தம் 40 நாடுகளுக்கு மேல் முடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பயனாளர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ஜிமெயில் முடங்கியுள்ளது என்று பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இதுகுறித்து ஹேர் ஸ்டாக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது குறித்து ஜிமெயில் நிறுவனம் விளக்கம் அளித்தபோது
” சில தொழில்நுட்ப காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் ஜிமெயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதனை விசாரித்து வருகிறோம் என்றும், விரைவில் சரி செய்யப்பட்டு அதனை தீர்வு கண்டு கொள்வோம் என்றும் கூறியுள்ளது. சர்வீஸ் சென்டர் ரெஃபரன்ஸ் பிரச்சினை காரணமாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.” ஜிமெயில் மட்டுமின்றி கூகுள் டிரைவ், யூடியூப் உள்ளிட்டவைகளும் ஒரு சில இடங்களில் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles