தன் அண்ணன் இன்னொரு அப்பாவிற்கு சமம் என பல தங்கைகள் சொல்வதை நாம் கேட்டு இருப்போம். மேலும் அவர்கள் தான் பெண்களின் பாதுகாப்பிற்கு ஓர் கவசம்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சென்னகரம்பட்டியை சேர்ந்தவர் சேதுபதி. அவருடைய மகள் சகுந்தலாதேவி இவருக்கும், அருகில் உள்ள கல்லம்பட்டியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இவர் தன் கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு தன் அண்ணன் வீட்டில் தான் கடந்த 5 வருடமாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஒரு நாள் சகுந்தலாதேவி அவர் அண்ணன் வீட்டில் படுகொலை செய்யயப்பட்டுள்ளார்.
போலீஸார் விசாரித்ததில் அவர் அண்ணன் தான் கொலையாளி என்பது தெரியவந்தது. மேலும் இது பற்றி போலீஸார் விசாரிக்கையில் இவர் வேறு ஒரு நபருடன் கள்ள தொடர்பு வைத்து இருந்ததால் நான் என் குடும்ப கௌரவித்திற்காக தங்கையை கொலை செய்தேன் என கூறியுள்ளார்.