உலகெங்கும் உள்ள மக்களை ஆட்டிப்படைக்கும் ஒற்றைச்சொல் கொரானா. இந்த வைரஸ் உலகத்தில் மனித இனத்தையே அழித்துவிடும் என்ற எண்ணம் தற்போது அனைவர் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி. சீனாவில் ஆரம்பித்த இந்த நோய் தொற்று தற்போது உலகெங்கும் உள்ள 250 நாடுகளுக்கு மேல் தாக்கிவருகிறது.
இந்நோய்த்தொற்றினை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் முயற்சி செய்து வருகின்றனர். இந்நோயை கட்டுப்படுத்த பல நாடுகளில் மாத கணக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் முதலில் ஒரு நாள் ஊரடங்கு என்று ஆரம்பித்த ஊரடங்கு 21 நாட்கள் கழித்து தற்போது ஒரு மாதம் வரை நீடித்துள்ளது அரசு.
அதற்குள்ளாவது இந்நோய் தடுப்பூசி கன்டுபிடித்து விடுவார்களா என்ற கேள்வி அனைவர் மனதிற்குள்ளும் எழும், இந்நோய் தொற்று அதாவது கோவிட்-19 என்ற வைரஸ் DNA மற்றும் RNA வில் RNA வைரஸாக உள்ளது. பொதுவாக மனித இனம் ஊறுவதற்கு முன்னரே வைரஸ் தோன்றிவிட்டது.
ஒரு வைரஸ் தன் உருவத்தையும் வீரியத்திலும் மாற்றிக்கொள்ளும் தன்மை உடையது. சில வைரஸ் வீரியம் கால போக்கில் குறையும் , சிலது அதிகரிக்கும், இதில் கோவிட் முதல் ரகம், நாளுக்கு நாள் இதன் வீரியம் அதிகரிப்பதால் தான் அனைவரையும் வீட்டில் இருக்க சொல்வது அவசியமாகிறது.
மேலும் இதன் கட்டமைப்பும் மாறி கொண்டே வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்போரையும் இந்நோய் தாக்க தான் செய்கிறது. மேலும் தடுப்பூசி என்பது ஒரு வைரஸை நம் உடலில் நோய் வருவதற்கு முன்னரே செலுத்துவது, இதனால் நோய்க்கான வைரஸ் தாக்கும் முன்பே இது எல்லா நோய் எதிர்ப்பு மணடலத்தையும் முன்னெச்சரிக்கை செய்துவைக்கும்.
உலகையே 2700 ஆண்டுகளாக பெரியம்மை என்னும் நோய் ஆட்டி படைத்தது. அதற்கு அந்த காலத்திலேயே தடுப்பூசி கண்டுபிடித்து அந்த நோயின் வேரையே பிடுங்கி எடுத்து போல், இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க வருடகணக்கெல்லாம் ஆகாமல் சில மாதங்கள் தான் ஆகும் என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளார்.
மேலும் இந்நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அனைவரும் சமூகஇடைவெளியை கடைபிடித்து வாழ்ந்தால் பிற்காலத்தை சந்தோசமாக வாழலாம்.