Sunday, May 19, 2024
-- Advertisement--

டெல்டா மக்களுக்கு சக்கரை செய்தி..!!!தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக திமுக முன்னாள் எம்.பி. AKS விஜயன் அவர்கள் நியமனம்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகிறார். மக்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்துக்கொண்டு ஊரடங்கு சில தளர்வுகளை அறிவித்து உள்ளார்.

மக்கள் கொரோனா தொற்று குறைந்துவிட்டதால் அலட்சியமாக இருக்க வேண்டாம் இன்னும் முழுமையாக கொரோனா தொற்றில் இருந்து மீளவில்லை. பாதுகாப்புடன் மக்கள் இருக்க வேண்டும். ஊரடங்கை மக்கள் அலட்சியம் செய்தால் தளர்வுகள் வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்திருந்தார்.

வருகின்ற 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சந்திப்பில் கொரோனா நடவடிக்கைகள் பற்றியும், தடுப்பூசிகள் பற்றியும் மேலும் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் டெல்லி விவகாரங்களை பார்த்துக் கொள்வதற்காக தனி பிரதிநிதி ஒருவர் வேண்டும் என்பதினால் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக திமுக முன்னாள் எம் பி AKS விஜயன் அவர்கள் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பவர் அமைச்சர்களுக்கு நிகரானவர் இவருக்கென்று தனி அறை தலைமை செயலகத்தில் கொடுக்கப்பட்டு டெல்லி விவகாரங்களை கண்காணித்து முதல்வரிடம் கூறும் முக்கிய பணியை இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2004 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற எம்பியாக இருந்த AKS விஜயன் தற்பொழுது டெல்லி சிறப்பு பிரதிநிதி பொறுப்பை கொடுத்திருப்பது டெல்டா மக்களுக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

ஏனெனில் டெல்டா மாவட்டத்தில் எந்த ஒரு அமைச்சருக்கம் பதவி வழங்கப்படவில்லை என்ற வருத்தம் டெல்டா மக்களிடம் இருந்ததது. தற்பொழுது டெல்டா மாவட்டமான நாகப்பட்டினத்தில் இருந்து ஒருவர் முக்கிய பொறுப்பை பெறுகிறார் என்பது சக்கரை செய்தியாக இருக்கிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles