Friday, May 3, 2024
-- Advertisement--

தினமும் ஒயிட் அண்ட் ஒயிட் ஆடையில் ஆடு மேய்க்கும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ…!!! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அபிமான எம்.எல்.ஏ.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் செல்லக்குட்டி எம்எல்ஏ என்று அழைக்கப்பட்ட சாத்தான்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீலமேக வர்ணம் தான் ஒயிட் அண்ட் ஒயிட் ஆடையில் தினமும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு வருபவர். 2003ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இடைத்தேர்தலுக்கு சுவர் விளம்பரம் எழுத வெள்ளை அடித்துக்கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த படுக்கப்பத்து கிராமத்தை சேர்ந்த இந்த சாதாரண தொண்டனாக நீலமேக வர்ணத்தை அதிமுக வேட்பாளராக அறிவித்ததோடு ஏழு நாட்கள் தொடர் பிரச்சாரம் செய்து வெற்றியும் பெற வைத்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றவருக்கு குவாலிஸ் கார் ஒன்றையும் அப்போது பரிசாக வழங்கியுள்ளார். 2006 ஆண்டு தேர்தலின் போது தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தகுதி நீக்கம் செய்யப்பட்டு சாத்தான்குளம் தொகுதி ஸ்ரீவைகுண்டம் தகுதியுடன் சேர்க்கப்பட்டு விட்டதால் அதன் பின் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து தீவிர அரசியலில் இருந்தாலும் தற்போது சொந்தமாக 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து அதனை காடுகளில் மேய்ப்பதையும், பதநீர் காய்ச்சி கருப்பட்டி மற்றும் கற்கண்டுகள் தயாரிக்கும் தொழிலையும் செய்து வருவதாக தெரிவித்தார்.

நீலமேக வர்ணன் பக்குவமாக பனங்கற்கண்டு தயாரிக்கும் பணிகள் மும்முரம் காட்டும் நீலமேக வர்ணம் வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே இந்த தொழிலில் இருக்கும் என்பதால் மீதமுள்ள நாட்களில் வழக்கம்போல விவசாய பணிகளை பார்க்க சென்று விடுவேன் என்று தெரிவித்தார்.

எம்எல்ஏவாக இருந்த போது தாமிரபரணி ஆற்று நீரை தொகுதியின் கடைக்கோடி வரை கொண்டு செல்ல மேற்கொண்ட முயற்சிக்கு ஜெயலலிதாவிடம் பாராட்டு பெற்றதாக கூறும் நீலமேக வர்ணம் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போதும் எளிமையுடன் தொகுதி மக்களுடன் தொடர்பில் இருந்தால் தான் அவர்களின் பிரச்சனைகளை அறிந்து உரிய தீர்வு காண இயலும் என்கிறார். பரிசாக கிடைத்த குவாலிஸ் காரை விற்றுவிட்டு பழையபடி சாமானிய தொண்டனாக தமது எம்ஐடி வாகனத்தில் ஊருக்குள் வலம் வருகின்றார் நீலமேக வர்ணம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles