கொரானோ ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே சென்றால் பாதிப்படைந்து விடுவார்கள் என்று எண்ணி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டில் இருக்கும் போதே நம்மை மரணம் அழைத்தால் என்ன செய்வது, இந்த நிலையில் தான் தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்த்துள்ளது. அதிகாலையில் சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உறங்கி இருக்கும் சமயம் விஷவாயு கசிந்து மூச்சு திணற முஐடியாமல் பலரும் திணறி சாலையிலேயே மடிந்து கீழே விழுகின்றனர்.
இது குறித்த வீடியோ மற்றும் செய்திகள் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகின, இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் வருத்தங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். தமன்னா, காஜல், மகேஷ் பாபு உள்ளிட்டோர் தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.