Saturday, May 4, 2024
-- Advertisement--

இந்தியாவிலேயே முதல் முறையாக ஐடிபிபி இந்திய – சீன எல்லை பாதுகாப்பு படையில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு சிங்க பெண்கள்…!!! மகளை பார்த்து சல்யூட் அடித்த தந்தை.

ஐடிபிபி எனப்படும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையில் முதல் முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவ படை ஐடிபிபி இந்திய சீன எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது உத்ரகண்டில் முசோரியில் ஐடிபிபி அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது.

இந்த மையத்தில் வெற்றிகரமாக பயிற்சி முடித்த 53 அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் இரண்டு பெண் அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர். முதல்வர் தாமி அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பெண் அதிகாரிகளான பிரக்ருதி, தீக்க்ஷ ஆகியோர் உதவி கமாண்டர்கள் ஆக ஐடிபிபி நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த படை பிரிவில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளது. இதுவே முதல் முறை.

மேலும் இந்தோ திபெத் பார்டர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேஷ் குமார் மகள் திக்ஷாவுக்கு சல்யூட் அடித்து பெருமையை சேர்த்துள்ளார். இதில் தந்தையே மகளுக்கு சல்யூட் அடிக்கும் தருணம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles