அதற்கு நிகராக மினியாக ஷாலினியின் நடிப்பும் இருக்கும். இருவரும் காதல் ஜோடியாக வாழ்ந்து இருப்பார்கள். இளையராஜா அவர்களின் இசை இன்னும் இந்த படத்திற்கும் பலம் சேர்த்தது.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் பெற்றோருக்காக காதலை தியாகம் செய்யும் காதல் ஜோடியின் வலிகளையும், காதலின் வலியை பெற்றோர்கள் புரிந்து கொள்ளுவது போல இருக்கும் அதனால் இளைஞர்கள் மத்தியில் இந்த படம் அப்பொழுது பெரிய பிரபலமானது.
மலையாளத்தில் ஹிட் ஆன இந்த படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்த போது மலையாளத்தில் ஹீரோயினாக நடித்த ஷாலினியை தமிழும் நடிக்க வைக்க முடிவு செய்தாராம் இயக்குனர் பாசில். அது மட்டும் அல்லாமல் இந்த படத்தில் முதலில் நடிகர் அப்பாஸ் நடிப்பதாக இருந்ததாம்.
அப்பாஸின் மேனேஜர் செய்த கால்ஷீட் குளறுபடியால் அந்த படத்தில் அப்பாஸிற்கு பதில் விஜய் தேர்வு செய்யப்பட்டாராம். இந்த படம் தமிழ் நாடு மற்றும் கேரளாவிலும் மக்களின் வரவேற்பை பெற்று வசூலில் சக்கை போடு போட்டது.
தளபதி விஜய் அம்மா ஷோபாவிற்கு இன்றும் மிகவும் பிடித்த பாடல் மற்றும் அவரது கலர் டியூன் இந்த பாடல் தான். சமீபத்தில் அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.