Monday, May 6, 2024
-- Advertisement--

முதல் முறையாக திருமணத்தை பற்றி மனம் திறந்த பிரபல நடிகை தமன்னா…!!!

தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் நடித்து வருபவர் தமன்னா. தற்போது தெலுங்கில் “கானி” என்ற படத்தில் கூட்தே என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

மேலும் குர்துண்ட சீதாகாலம், F3 , போலா சங்கர், தட் இஸ் மகாலட்சுமி ஆகிய படங்களிலும் ஹிந்தியில் போலே சூடியன், பிளான் ஏ பிளான் பி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர் விரைவில் நடிப்புக்கு முழுக்கு போட்டு
விட்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில் “என் திருமணத்தை பற்றி வெளியாகும் தகவல் அனைத்தும் வதந்தி” இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து என் திருமணத்தை பற்றி யோசிப்பேன். தற்போது சினிமா மற்றும் தொடர்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles