Sunday, May 19, 2024
-- Advertisement--

குட்டி தலையைக் கொண்டாடும் மக்கள்…!!! என்ன ஸ்பெஷல் தெரியுமா ..?

பொதுவாக ஒரு நடிகருக்கு மிகப்பெரிய பலமாக இருப்பது அவரது ரசிகர்கள் தான். எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கும் அவர்கள் சென்றாலும் அவர்களை ரசிகர்கள் கைதட்டி ஆதரவு தருவது அந்த நடிகருக்கு மிக முக்கியமான ஒன்று.

ஆனால் எனக்கு எந்த ரசிகரும் வேண்டாம் ரசிகர் மன்றமும் வேண்டாம் என்று ரசிகர்கள் பொதுமக்களிடமிருந்து ஒதுங்கி தன் வேலையை மட்டும் பார்த்து வருபவர் நடிகர் அஜித்.

பல வருடங்களாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளாமல் எந்த பட பிரமோஷனிலும் பங்கு கொள்ளாமல் சினிமாவில் நடிப்பதை மட்டும் தொடர்ந்து செய்து வருகிறார்.

அஜித் என்னதான் ரசிகர் மன்றம் வேண்டாம் என்று சொன்னாலும் அவர்கள் ரசிகர்கள் விடுவதாக இல்லை. தொடர்ந்து அஜித்திற்கு சப்போர்ட் செய்து தான் வருகின்றனர். இதனாலே அவர் தல அஜித் என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

தல அஜித் மற்றும் அவர் காதல் மனைவியான நடிகை ஷாலினியும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில் அவர்கள் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித்திற்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று ஆத்விக் அஜித்திற்கு பிறந்த நாள். அதனை அவர்கள் ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர். அஜித்தின் மகன் ஆத்விக்கை ரசிகர்கள் குட்டி தல என்று கூறி வருகின்றனர். அவர் பிறந்த நாளன்று அவர் அஜித்துடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு குட்டி தலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற ஹேஷ் டேக்கையும் வைரலாக்கி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles