Sunday, May 19, 2024
-- Advertisement--

ஓடி ஒளிய இந்த இடம் தானா கிடைச்சது..!! வைரலாகும் யானைக் குட்டியின் க்யூட்டான புகைப்படம்..!!

எப்போதுமே விலங்குகள் செய்யும் சில செயல்கள் பார்ப்போரை கவரும் வண்ணம் இருக்கும். அதுவும் பொதுவாக யானைகள் யா யானைக் குட்டிகள் என்றால் அனைவருக்கும் விருப்பமான விலங்கு. யானை மீது சவாரி செய்வதுபலருக்கு பிடிக்கும்.

தாய்லாந்தில் கரும்புகளை தின்னும் ஆசையில் தோட்டத்துக்குள் புகுந்த யானை குட்டி செய்த செயல் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தாய்லாந்து நாட்டில் சுமார் 2000 யானைகள் உள்ளது. நமது ஊர்களை போலவே அவ்வப்போது வயல்களுக்குள் புகுந்து விடும் யானைகள் அங்குள்ள சோளம் கரும்பு போன்றவற்றை திருடி கொண்டு செல்லும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதற்காக யானைகள் வரவை தடுப்பதற்காக இரவில் காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுபோல வடக்கு தாய்லாந்தின் சியாங் மாய் பகுதியில் கரும்பு தோட்டம் ஒன்றில் ஏதோ சத்தம் கேட்டது. இதனால் அங்கிருந்த காவலர்கள் டார்ச் லைட்டை தூக்கிக் கொண்டு அங்கு ஓடி உள்ளனர். அப்பொழுது கரும்பை சாப்பிடுவதற்காக தன்னந்தனியாக குட்டியானை ஒன்று கரும்பு தோட்டத்திற்கு வந்து உள்ளது. அங்கு ஆட்கள் சிலர் டார்ச்லைட் அடித்து வருவதை பார்த்ததும் அது பயந்து போய் ஒளிய முயற்சி செய்தது. ஆனால் ஒளிவதற்கு அதற்கு எந்த இடமும் இல்லாததால் அங்கு உள்ள மின் கம்பம் ஒன்றின் பின்னால் ஒளிந்து கொண்டு நின்றது.

இதில் என்ன வேடிக்கை என்றால் மின்கம்பியை விட யானைக்குட்டி பெரியது என்பது யானைக் குட்டிக்கு தெரியவில்லை. தனது கண்கள் மட்டும் மின்கம்பத்தை பின்னால் இருப்பதால் நாம் முழுவதுமே மறைந்து விட்டோம் என்ற எண்ணத்துடன் அது ஒளிந்து கொண்டது. இந்த வேடிக்கையான செயலை போட்டோ எடுத்த காவலர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். தற்பொழுது இந்த யானைக் குட்டியின் புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles